ஒல்லியாக நான் ஊசி போட்டேனா? உண்மையை போட்டுடைத்த நடிகை தமன்னா - என்னன்னு நீங்களே பாருங்க
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தமன்னா. இவர் தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வந்த கேடி படம் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சியமானவர். ஆனால், அதற்கு முன்பாகவே இவர் ஹிந்தி படங்களின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின் இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய பல மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். இடைப்பட்ட காலங்களில் இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையாமல் இருந்தது.
பின் பிரபாஸின் பாகுபலி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகை தமன்னா பிசியாக படங்களில் நடித்துப் வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘அரண்மனை 4’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதை தொடர்ந்து நடிகை தமன்னா படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு சமீப காலமாகவே தமன்னா அவர்கள் கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடி வருகிறார். அந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
தமன்னா திரைப்பயணம்:
இதற்கிடையில் மத்தியில் தமன்னா அவர்கள் விஜய் வர்மா என்பவரை காதலிப்பதாக தகவல் வெளியானது. இவர்கள் இருவருமே சில வருடங்களாக டேட்டிங் செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது. அதற்குப்பின் கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. பின் சில மாதங்களாக தமன்னா- விஜய் வர்மா காதல் பிரேக் அப் செய்து விட்டதாக கூறப்பட்டது.
உடல் எடை சர்ச்சை:
தன்னுடைய காதல் முறிவுக்குப் பிறகு தமன்னா அவர்கள் தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இதற்கிடையில் தமன்னா அவர்கள் கொஞ்சம் உடல் எடை பூசியவாறு காணப்பட்டிருந்தார். ஆனால், சில மாதங்களாக தமன்னா அவர்கள் உடல் எடை சட்டென குறைந்து 20 வயது நடிகைபோல மாறி இருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் இவர் ஊசி போட்டு தான் தன்னுடைய உடல் எடையை குறைத்து இருக்கிறார் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் சர்ச்சை எழுந்திருக்கிறது.
சர்ச்சைகளுக்கு விளக்கம்:
இந்நிலையில் தொடர்பாக அளித்த பேட்டியில் தமன்னா, என்னைப் பொருத்தவரை சினிமாவில் நான் அறிமுகமாவது எப்படி இருந்தேனோ அப்படியே தான் இப்போதும் இருக்கிறேன் என்று நினைக்கிறேன். நான் எந்த ஊசியையும் போட்டு எடை குறைப்பதற்காக போட்டுக்கொள்ளவில்லை. அதற்கான அவசியமும் எனக்கு ஏற்படவில்லை. பெண்களின் உடல் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும் தன்மை கொண்டது. எனக்கும் அப்படித்தான் ஒரே மாதிரியாக இருக்காது. என்னை பொறுத்தவரை எனது உடலில் புதிதாக எந்த மாற்றமும் தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.