பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி உடையை காப்பி அடித்த தமன்னா - கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.

By Manikandan · 20/12/2022

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா. ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான கேடி படத்தில் கேடியான ஒரு கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் படத்தில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. பால் டப்பாவை போன்ற இவரது அழகை கண்டு இவருக்கென்று ஒரு தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். நடிகை தமன்னா நடிப்பில் கடைசியாக வெளி வந்த தமிழ் திரைப்படம் ‘ஆக்ஷன்’. கதையின் நாயகனாக விஷால் நடித்திருந்த இந்த படத்தினை பிரபல இயக்குநர் சுந்தர்.சி இயக்கியிருந்தார்.

https://www.youtube.com/watch?v=TpvCtHc7ktU

கேடி படத்தைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த தமன்னா, பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் அஜித் சூர்யா என்று பல்வேறு நடிகர்களுடன் கைகோர்த்து சூர்யா மேலும் ,தமிழ் தெலுங்கில் மட்டுமல்லாது பாலி விட்டுவிடும் தனது என்ட்ரியை கொடுத்திருந்தார் தமன்னா.இடைப்பட்ட காலங்களில் பட வாய்ப்புகள் சரியாக அமையாமல் இருந்த தமன்னாவிற்கு பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து ‘சரிலேறு நீகேவ்வறு’ என்ற தெலுங்கு படத்தில் இடம்பெற்ற ‘டாங் டாங்’ என்ற பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார் தமன்னா. சமீபத்தில் நடிகை தமன்னாவின் அம்மா தமன்னா. அப்பா இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. அவர்களை தொடர்ந்து தமன்னாவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.கொரோனா தொற்றால் வீட்டில் முடங்கிய தமன்னாவிற்கு கொஞ்சம் உடல் எடை கூடியது.

https://www.youtube.com/watch?v=4X_34rSVL8U

இந்நிலையில் மீண்டும் சினிமாவிற்கு வந்துள்ள தமன்னா தற்போது தெலுங்கு, ஹிந்தி மொழியில் முக்கியத்துவம் கொடுத்து
போலா சங்கர், போலே சூடியன், பாந்த்ரா போன்ற திரைப்படங்களில் வரும் 2023ஆம் ஆண்டு தொடர்ந்து நடிக்க உள்ளார். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஆகிட்டிவாக இருக்கும் தமன்னா இரு நிறங்களில் உடையை அணிந்த வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழும் சில்பா ஷெட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனிஷ் மனோஜிராஜ் பார்ட்டியில் கலந்து கொண்டபோது இதே போல ஒரு இரு நிறமுடைய உடையைத்தான் அணிந்திருந்தார். இப்படியிருக்கும் போது தமன்னா சில்பா ஷெட்டி போட்டிருந்த அதே உடையை காப்பியடித்திருக்கிறார் என்று நெட்டிசங்கள் கேலி செய்து வருகின்றனர். இந்த உடை ஷில்பா ஷெட்டிக்கு தான் நன்றாக இருந்தது உங்களுக்கு கேவலமாக இருக்கிறது என்றெல்லாம் கமண்ட் செய்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full