Kgf வில்லன் லுக்கில் பிரேம் - ப்பா கொல மாசா இருக்காரே. இதோ பாருங்க.
தென்னிந்திய சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் மக்களிடையே பிரபலமாவது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். அதிலும் ஒரு சில பேர் மட்டும் தான் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பார்கள். அந்த வகையில் வந்தவர் தான் நடிகர் பிரேம். இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்து உள்ளார். மேலும், பலரின் ஃபேவரட் நடிகர் என்ற பட்டத்தையும் பெற்று உள்ளார். மேலும், நடிகர் பிரேம் அவர்கள் விஜய், சூர்யா என சினிமா துறையில் உள்ள முன்னணி நட்சத்திரங்களின் படத்தில் நடித்து உள்ளார்.
நடிகர் பிரேம் அவர்கள் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் மாதவனுடன் இணைந்து இவர் நடித்த விக்ரம் வேதா திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. நடிகர் பிரேமிற்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்து முடிந்து விட்டது. மேலும், இவருக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர். அவருடைய மகன் கௌஷிக் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து உள்ளார்.
அனைவருக்கும் தெரிகிற மாதிரி சொன்னால் சத்யராஜ் ரம்பா நடிப்பில் வெளிவந்த 'குங்குமப் பொட்டு கவுண்டர்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக பிரேம் அவர்களின் பையன் கௌஷிக் நடித்து உள்ளார். மேலும்,அதில் பிரேம் அவர்கள் கூறியது, நான் தலை மற்றும் தலைவரோடு தான் நடித்ததில்லை. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன் அவர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.ஆனால், அவர்களுடன் நிறைய விஷயங்களை பகிர்ந்து உள்ளேன். ஒருமுறை வீரம் படத்தின் போது நான் தல அஜித்திடம் நான்கு மணி நேரம் பேசினேன். அதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொண்டேன்.
நடிகர் பிரேம் விஜய்யின் சர்க்கார் படத்தில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்து வருகிறார். சமீப காலமாக நடிகர் பிரேம் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் Kgf 2 வில்லன் சஞ்சய் தத்தை போல படு மாஸான லுக்கில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் இதோ.