கெத்து காட்டும் ஹீரோக்கள், க்யூட் ரியாக்‌ஷன்களால் மனசை அள்ளும் ஹீரோயின்களைத் தாண்டி சில ஃப்ரேம்களில் ஆதிக்கம் செலுத்துவார்கள் குட்டி நட்சத்திரங்கள்.
பெருசுகளையே கலாய்க்கும் கவுன்ட்டர் டயலாக்காக இருந்தாலும் சரி, பார்க்கும் எல்லாரையும் கண் வியர்க்க வைக்கும் சென்டிமென்ட் காட்சிகளாக இருந்தாலும் சரி… ‘அடடே இந்தச் சுட்டி செமையா நடிக்குதே!’ என நம்மை ஓ போட வைத்த சில சுட்டிகள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என ரிவர்ஸ் கியர் போட்டுப் பார்ப்போம்!

ஷ்ரியா சர்மா:

Advertisement

இந்த ஏஞ்சல் குட்டி பார்பி பொம்மையாக அறிமுகமானது தெலுங்கில். தமிழின் மோஸ்ட் வான்டட் ஜோடி சூர்யா – ஜோதிகாவின் மகளாய் ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் நடிக்க, தலையில் வைத்துக் கொண்டாடியது தமிழகம்.

Advertisement

அதன்பின் ஆண்டுக்கொன்றாய் படம் பண்ணியவர் இப்போது நெடுநெடுவென வளர்ந்து தெலுங்கில் ஹீரோயினாகவும் கால் பதித்துவிட்டார். ‘நிர்மலா கான்வென்ட்’ படத்தில் இவர் நடிப்புக்கு அப்ளாஸ் குவிந்தது. இப்போது, மும்பையில் சட்டம் படித்து வருகிறார்.

Advertisement

ஆன் அலெக்ஸியா ஆன்ரா:

பளீர் வெள்ளை நிறம், பால் நிற சிரிப்பு என உலக நாயகனின் மகளாய் ‘அவ்வை சண்முகி’யில் அசரடித்த குட்டி தேவதைதான் இவர். அதன்பின் நிறைய வாய்ப்புகள் வந்தாலும் ஏனோ சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.

பத்திரிகைகளில் எழுதுவது, அழகிப் போட்டிகளில் கலந்துகொள்வது எனத் தன்னை பிஸியாகவே வைத்திருந்தவர் இப்போது மாடலிங்கில் பிஸி. சீக்கிரமே யாராவது இவங்களை ஸ்க்ரீன்ல காட்டுங்கப்பா!

Advertisement