தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக இருந்தது கடந்த வாரம் வரை கிட்டத்தட்ட 180 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர். இன்னும் சிறிது நாட்கள் இருந்திருந்தால் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் 200ஐ தொட்டு இருக்கும். இந்த ஆண்டு வெளியான 180 ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் டாப் ஹீரோ தொடங்கி சிறிய பட்ஜெட் படங்கள் வரை அனைத்தும் நல்ல வசூல் சாதனையை பெற்றுள்ளது.

Advertisement

இந்த நிலையில் தமிழ் சினிமா இந்த ஆண்டு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரும் பெருமையாக கருதப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு வெளியான டாப் 10 படங்களில் இளையதளபதி விஜயின் பிகில் திரைப்படம் தான் முதலிடத்தில் இருக்கிறது மேலும், இந்தத் திரைப்படம் பாலிவுட்டில் அக்ஷய்குமார் நடிப்பில் வெளியாக இருந்த ஹவுஸ்ஃபுல் 4என்ற திரைப் படத்திற்கு போட்டியாக களம் இறங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்த படத்திற்கு தமிழில் போட்டியாக கைதி திரைப்படமும் களமிறங்கியது.

ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த மெர்சல் சர்க்கார் போன்ற திரைப்படங்கள் 200 கோடி ரூபாயை வசூல் செய்து 300 கோடி ரூபாயை எட்ட முடியாமல் இருந்தது. ஆனால், அந்த சாதனையை பிகில் திரைப்படம் மிகவும் எளிதாக எட்டியது. மேலும், இந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களில் அதிக வசூல் செய்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள பிகில் திரைப்படம் 300 கோடி ரூபாயை வசூலித்து அந்தப் பட்டியலில் முதல் இடத்திலும், அதற்கு அடுத்தபடியாக சூப்பர் ஸ்டாரின் பேட்ட திரைப்படம் 250 கோடி வசூல் செய்து 2வது இடத்திலும் இருக்கிறது.

Advertisement

Advertisement

பெரும் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் 206 கோடி ரூபாயையும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் 108 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது மேலும் லாரன்ஸின் காஞ்சனா 3 திரைப்படம் 100 கோடி ரூபாயையும் தனுஷ் அசுரன் மற்றும் கார்த்திக்கின் கைது ஆகிய திரைப்படங்கள் 100 கோடி ரூபாயும் வசூல் செய்திருக்கிறது இதன் மூலம் தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒன்றாக சேர்ந்து ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது

Advertisement