குழந்தைகளின் சிந்தனைத் திறன் பற்றி இந்திரஜா வெளியிட்ட வீடியோ - கொந்தளித்த தமிழ்நாடு அரசு, பின்னணி என்ன?
தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். இவர் குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் காலத்தில் தமிழ் சினிமாவில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். முதலில் இவர் சின்னத்திரை நிகழ்ச்சியில் தான் பங்கேற்றார். அதன் பின் தான் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின் இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி ரோலில் நடித்து இருக்கிறார்.
சிறிய இடைவெளிக்கு பின் இவர் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இதனிடையே 2002 ஆம் ஆண்டு நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒரு மகள் இந்திரஜா.
இவர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘பிகில்’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகஅறியப்பட்டார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பை பார்த்து பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள்.
ரோபோ ஷங்கர் மகள்:
அதற்குப் பின் இவர் ஜீ தமிழில் அர்ஜுன் தொகுத்து வழங்கியிருந்த சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருந்தார். ஆனால், இவரால் இறுதிவரை தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதனை தொடர்ந்து இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த ‘விருமன்’ படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையே, இந்திரஜா தனது முறை மாமா கார்த்திககை திருமணம் செய்து இருக்கிறார். ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்காவின் வளர்ப்பு தம்பி ஆவார். இவர்கள் இருவரின் திருமணம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.
இந்திரஜா- கார்த்திக் திருமணம் :
மேலும், இவர்கள் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியிருந்தார்கள். அதைத்தொடர்ந்து மீடியாவில் விஜய் டிவியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை மக்களுக்கு பகிர்ந்து இருந்தார்கள் இந்திரஜா-கார்த்தி ஜோடி. பின் இந்திரஜா-கார்த்திக் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதற்கு வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். குழந்தை பிறந்த பிறகு இந்திரஜா சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக இருக்கிறார். மேலும், ஹெகுரு பயிற்சி பற்றி இந்திரஜா- கார்த்திக் தம்பதியினர் வீடியோ வெளியிட்டு இருந்தார்கள்.
இந்திரஜா வீடியோ:
அதில், தமிழ்நாட்டின் குழந்தைகளுடைய சிந்தனைத் திறன் குறைந்து இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிந்தனை தற்போது இல்லை என்று ஆய்வுகள் சொல்வதாக சொல்கிறது. மத்திய அரசு மூளை செயல்படுத்துதல் பயிற்சி முறைக்காக தனியாக பட்ஜெட் ஒதுக்கி உள்ளது. குழந்தை பிறந்தவுடன் கூட அங்கன்வாடியில் சேர்க்க அரசு திட்டம் வகுத்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். இப்படி இவர்கள் பேசி இருந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. இதற்கு தமிழ்நாடு அரசு, உண்மை சரி பார்க்க வேண்டும் என்று அவர்களுடைய கருத்திற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசு கண்டனம்:
இவர்கள் சொல்வதெல்லாமே தவறு. ஹெகுரு பயிற்சி குறித்து நவ்சேத்னா குழந்தையின் நலன் மற்றும் பராமரிப்பு குறித்த கட்டமைப்பு தொடர்பான ஆவணத்தில் வலது மூளை செயல்படுதல் குறித்து எந்த தகவலுமே இல்லை. தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனை திறனும் மூளை வளர்ச்சி குறைந்ததாக எந்த ஒரு தகவல்களும் இல்லை. பிறந்த குழந்தை பராமரிக்க வாய்ப்பு இல்லாத நிலையில் அங்கன்வாடியில் சேர்க்கலாம் என்று சொல்வது ரொம்ப தவறானது. மூளை செயல்படுதல் மற்றும் பயிற்சிகளை ஊக்குவிக்கவும் நடைமுறைப்படுத்தவோ அரசு எந்த ஒரு தொகையும் பட்ஜெட்டில் ஒதுக்கவில்லை. அதோடு ஹெகுரு ஒரு கல்வி முறையே கிடையாது. இது ஒரு ஆக்டிவிட்டி என்று சொல்வதும் தவறான செயல் என்று கூறியிருக்கிறார்கள். அதோடு இந்த ஹெகுரு பயிற்சி மையத்தின் சமூக வலைத்தள பக்கத்தில், இது ‘JAPAN CERTIFIED RIGHT BRAIN EDUCATION’ என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதனால் இந்திரஜாவின் கருத்துக்கு பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்