இந்த நோயில் தமிழ் நாடு தான் தற்போது முதலிடமாம் - அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து வல்லுநர்கள் ஐடியா.

By Dhilip Kumar · 10/9/2023

சர்க்கரை நோய் பாதிப்பு உண்டாகும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் சர்க்கரை நோயின் பாதிப்பு கணிசமாக தமிழகத்தில் உயர்ந்துள்ளது. அதேபோல் அருகில் இருக்கும் மற்றொரு வளர்ந்த மாநிலமான கேரளாவிலும் சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகரித்துள்ளது. சர்க்கரை நோய் குறித்து ஆராய்ச்சி செய்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் “இந்தியா பி” என்ற தலைப்பில் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் முழுவதும் இது குறித்து ஆராய்ச்சியை மேற்கொண்டது.

அதன் பின் அவர்கள்  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆய்வு குறித்து முடிவுகளை வெளியிட்டது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கணிசமாக நீரிழிவு நோயின்  பாதிப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் மேலும் அதே போல் உத்தரப்பிரதேசம் பீகார் போன்ற மாநிலங்களிலும் சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகரித்து உள்ளது கடந்த வருடத்தை விட இந்த வருடமும் அதிகரித்துள்ளது. இது குறித்து மருத்துவர் சிவராமன் கூறுகையில்  முறையான உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி இல்லாதது சுற்றுச்சூழல் பாதிப்பு இதனால் தான் சக்கரை நோய் வந்து வருகிறது என்று கூறினார்.

இதனை எவ்வாறு தடுப்பது என்று தேசிய மருத்துவர் மணி எத்தனை இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் ஆலோசனை  கூறினார்கள். இது குறித்து பேசி சித்த மருத்துவ சிவராமன் மருத்துவத் துறையில் பெரும்பாலும் தொற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது ஆனால் சர்க்கரை நோய் போன்ற தொற்றால் நோய் குறித்து விழிப்புணர்வு குறைவாகவே ஏற்படுத்தப்பட்டது. இதனால தான் இந்தியாவில்  தமிழகம். பாதிக்கப்பட்டுள்ளது.

ஐ சி எம் ஆர் வெளியிட்டு ஆய்வின்படி தமிழகத்தில் 25 சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது. இதில் மேலும் மேலும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் என்னவென்றால் 30 வயது உடையவர்களுக்கு சர்க்கரை நோய் எளிதாக வருகிறது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி வைத்திருப்பவர்கள் 10.3 சதவீதம் பேர் மட்டுமே என்றும் அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. இதனைக் கட்டுப்பாட்டில் வைக்காததன் விளைவாகவே மாரடைப்பு சிறுநீரக செயலிழப்பு மற்றும் பக்கவாதம் போன்ற வியாதிகளும் வருகிறது.

சர்க்கரை நோயை குறித்து மற்ற நாடுகளை பொறுத்தவரை அங்கு உள்ள மருத்துவமனைகளை அவர்களின் சலுகை ஏற்கிறது. ஆனால் இந்தியாவில் அது போன்று எந்த ஒரு சலுகைகளும் கிடையாது. இருப்பிடம் தமிழகத்தில் முதன்முறையாக தொற்று நோய் பாதிப்புக்கு தடுக்கும் வகையில் மக்களை தேடி மருத்துவம் என்னும் மகத்தான திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம்  சுமார் ஒரு கோடி நோயாளிகளை சென்றடைந்தது. இருப்பினும் அடுத்த கட்டமாக நீரிழிவு தடுக்கும் வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.

நீரிழிவு நோய் என்பது தற்போது பொருளாதார பிரச்சினையாக மாறி உள்ளது. ஒரு குடும்பத்தில் 30 ஆயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கும் நபர்களில் இரண்டு பேருக்கு சர்க்கரை நோய் இருந்தால் அவர்களின் மாத செலவு பத்தாயிரம் ஆகிடுகிறது. இந்த சிக்கல்களை கையாளுவதற்கு அரசு பல திட்டங்களை வகுத்து வந்தாலும் இதை முன்கூட்டியே தடுப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை இணைந்து மேற்கொள்ள வேண்டும். என்று இதில் கலந்து கொண்டவர்கள் கூறினார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full