ஒரு நைட்க்கு எவ்ளோ - மோசமாக கேட்ட நபருக்கு நீலிமா அளித்த செருப்படி பதில்.

By Rajkumar · 4/1/2021

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகைகளை விட வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த நடிகைகள் தான் அதிகம். அந்த வரிசையில் வந்தவர் தான் நடிகை நீலிமா. 1992 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன், தம், மொழி, ராஜாதி ராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

அதன் பின்னர் பல்வேறு திரைப் படங்களில் துணை நடிகையாக நடித்து உள்ளார். மேலும், 30க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்து உள்ளார்.' நான் மகான் அல்ல' படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வாங்கினார். பிறகு வழக்கம் போல் நடிகை நீலிமாவும் சின்ன துறை நோக்கி பயணம் செய்தார். இவர் நடித்த முதல் சீரியல் 1998ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான இதி கதா காது என்ற சீரியல் தான்.

அதன் பின்னர் இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல தொடர்களில் நடித்து உள்ளார். இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து உள்ளார். இவருக்கு சிறு வயதிலேயே அதாவது 21 வயதிலேயே திருமணம் செய்து விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.இவர் திருமணம் ஆனாலும் தொடர்ந்து தொடர்களிலும், சினிமாக்களிலும் நடித்து கொண்டு தான் இருக்கிறார்.

இத்தனை படங்களில் நடித்தாலும் நடிகை நீலிமா ஒரு படத்தில் கூட கதாநாயகியாக நடிக்கவில்லை. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நீலிமா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். அப்போது ஒருவர், ஒரு நைட்க்கு எவ்ளோ என்று மோசமான கேள்வியை கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த நீலிமா, கொஞ்சம் நாகரீகத்தை எதிர்பார்க்கிறேன். மற்றவர்களை கேவலமாக பேசுவது வக்கிர புத்தியின் காரணம் தான். தயவு செய்து மனோதத்துவரை பாருங்க என்று பதில் அளித்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full