சீரியல் ரவுண்ட் அப் : சினிமாவிற்கு சிறகடித்து பறந்த நடிகை, 1000 எபிசோடை கடந்த சீரியல். திடீரென்று விலகிய நடிகை.

By subhashini · 31/5/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. அண்ணாமலை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில் கதாநாயகியின் தங்கை சீதா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் சங்கீதா. இவர் இந்த சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். இருந்தாலும், இதற்கு முன்பு ஒரு சில சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் வெள்ளித் திரையில் கால் தடம் பதிக்க போகிறார். இவர் புது படம் ஒன்றில் கமிட் ஆகி இருக்கிறார். கூடிய விரைவில் இவர் நடிக்கப்போகும் படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சுந்தரி 2 சீரியல்:

சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் சுந்தரி. இந்த சீரியல் மூலம் கேப்ரில்லா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் சேர்த்து வைத்து இருக்கிறார். இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. எப்படியாவது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு எண்ணற்ற பிரச்சனைகளை சமாளித்து போராடும் கதாபாத்திரம் தான் சுந்தரி. அதுமட்டுமில்லாமல் சுந்தரி கருப்பு நிறம் உடையவள்.

சீரியல் குறித்த அப்டேட்:

ஆகவே, சுந்தரி சாதனை செய்வதற்கும் நிறத்திற்கும் சம்பந்தமில்லை என்பதை முறியடித்து போராடி வருகிறார் சுந்தரி. அதனாலே இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சீக்கிரமாக இடம் பிடித்து விட்டது. மேலும், இந்த சீரியலின் முதல் பாகத்தை முடித்துவிட்டு இரண்டாம் பாகத்தை ஒளிபரப்பி இருக்கிறார்கள். தற்போது இந்த தொடரும் ஆயிரம் எபிசோடுகளை கடந்திருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த குழுவும் இதை செலிபரேட் செய்திருக்கிறார்கள்.

சிங்கப்பெண்ணே சீரியல்:

கடந்த ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் தான் சிங்கப் பெண்ணே. தன்னுடைய குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ்சில் வேலைக்கு செல்கிறார் ஆனந்தி. இவருடன் சில பெண்களும் வேலை செய்கிறார்கள். அங்கு அவர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக வைத்து தான் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் ஒளிபரப்பாகி தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.

சீரியலை விட்டு விலகிய நடிகை:

மேலும், இந்த தொடரில் ரெஜினா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் ஜீவிதா. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்திரா என்ற தொடரிலும் நடித்திருந்தார். தற்போது இவர் இந்த இரண்டு தொடர்களிலும் இருந்து விலகி இருக்கிறார். சிங்கப் பெண்ணை தொடரில் இவருக்கு பதிலாக விஜே கல்யாணி கமிட்டாகியிருக்கிறார். ஜீவிதா அவர்கள் சன் டிவியில் புதிதாக வரவிருக்கும் தொடரில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த காரணத்தினால் தான் இவர் இரண்டு சீரியலிலும் விலகி இருக்கிறார். இவர் நடிக்க இருக்கும் புது சீரியல் குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full