டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவியை பின்னுக்குத் தள்ளிய சன் டிவி சீரியல்கள், எந்த சீரியல் முதல் இடம் தெரியுமா?

By Rajkumar · 26/9/2024

டிஆர்பி ரேட்டிங்கில் இந்த ஆண்டில் 38 வது வாரத்தில் டாப் 5 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமீப காலமாக டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் கடந்த சில ஆண்டுகளாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள்.

கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தில் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு வரை சீரியல்கள் வரிசை கட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் டிவி திகழ்கிறது. எப்போதும் இந்த சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவில் வருகிறது.

சீரியல் டிஆர்பி:

அதோட டிஆர்பி ரேட்டிங்கில் கூட இந்த சேனல்களின் சீரியல்கள் தான் மாறி மாறி முதலிடம் பிடிக்கிறது. அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டின் 38 வது வாரத்தில் டிஆர்பி யில் முதல் ஐந்து இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த வாரம் சன் டிவி விஜய் டிவியை பின்னுக்கு தள்ளியுள்ளது.

கயல்:

கடந்த வாரம் போலவே இந்த வாரமும் 'கயல்' சீரியல் 9.07 புள்ளிகளுடன் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. தனது குடும்பத்திற்காக எல்லா சந்தோஷத்தையும் இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை தான் கயல் சீரியல். அடுத்தடுத்து கயலுக்கு பல தொந்தரவுகள் வந்து நிலையில், தற்போது நிலைமை மாறி பாசிட்டிவான கண்ணோட்டத்தில் இந்த தொடரை ஒளிபரப்பு வருகிறார்கள். எழில் மற்றும் கயல் திருமணம் டிராக்தான் பரபரப்புடன் சென்று கொண்டிருக்கிறது.

சிங்க பெண்ணே:

வாரம் வாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் 'சிங்க பெண்ணே' சீரியல், இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.56 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ்சில் வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார் ஆனந்தி. இவருடன் சிலபேர் வேலை செய்கிறார்கள். அங்கு அவர் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து தான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

மூன்று முடிச்சு:

'மூன்று முடிச்சு' சீரியல் இந்த வாரம் 8.40 புள்ளிகளுடன் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலில் நடிகை சுவாதி கொண்டே கதாநாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகர் நியாஸ் நடித்துள்ளார். இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

மருமகள்:

கடந்த வாரம் ஐந்தாவது இடத்தில் இருந்த 'மருமகள்' சீரியல், இந்த வாரம் 8.32 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்புதான் சன் டிவியில் ஒளிபரப்ப தொடங்கினார்கள். ஒளிபரப்பான நாளிலிருந்து தற்போது வரை இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது சீரியலில் பிரபு-ஆதிரை திருமண டிராக் சென்று கொண்டிருக்கிறது.

சிறகடிக்க ஆசை:

கடந்த வாரம் மூன்றாவது இடத்தில் இருந்த 'சிறகடிக்க ஆசை' சீரியல் இந்த வாரம் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த சீரியல் இந்த வாரம் 7.77 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளிலிருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியல் நாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full