டிஆர்பி ரேட்டிங்காக கடுமையாக மோதிக்கொள்ளும் சன் டிவி, விஜய் டிவி சீரியல்கள் - டாப் 5 லிஸ்ட் இதோ
டிஆர்பி ரேட்டிங்கில் 2025 ஆம் ஆண்டில் 22வது வாரத்தில் டாப் 5 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வருடமாகவே ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது.
வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு வரை சீரியல்கள் வரிசை கட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் டிவி திகழ்கிறது. எப்போதும் இந்த இரு சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. அதோட டிஆர்பி ரேட்டிங்கில் கூட இந்த இரு சேனல்களின் சீரியல்கள் தான் மாறி மாறி முதலிடம் பிடிக்கிறது.
சீரியல் டிஆர்பி:
அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டின் 22வது வாரத்தில் டிஆர்பியில் முதல் ஐந்து இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. சீரியல்கள் பட்டியல் இதோ,
கயல்:
கடந்த சில மாதங்களாக பின்னுக்கு சென்ற கயல் சீரியல் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.63 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. தனது குடும்பத்திற்காக எல்லா சந்தோசத்தை இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை தான் கயல் சீரியல். அடுத்தடுத்து கயலுக்கு பல தொந்தரவுகள் வந்த நிலையில் தற்போது கயலின் திருமண வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை கொண்டு இந்த தொடரை ஒளிபரப்பி வருகிறார்கள்.
சிங்க பெண்ணே:
வாரம் வாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் ‘சிங்க பெண்ணே’ சீரியல் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.60 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ்சில் வேலை செய்து கொண்டிருக்கிறார் ஆனந்தி. ஒருவழியாக ஆனந்தி-அன்பு காதல் தெரிய வருகிறது. ஆனந்தி தனக்கே தெரியாமல் கர்ப்பமாக இருக்கிறார். இதனால் அவர் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து தான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
மூன்று முடிச்சு:
இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 8.57 புள்ளிகளை பெற்று இந்த வாரம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலில் ஸ்சுவாதி கதாநாயகியாகவும், இவருக்கு ஜோடியாக நியாஸ் ஹீரோவாக நடிக்கிறார்கள். கடந்த ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சீரியலில் நந்தினி-சூர்யா திருமணத்தால் சூர்யா அம்மா பயங்கர கோபத்தில் இருக்கிறார். இனி அவர் என்ன செய்வார்? என்ற ட்ராக்கில் தான் சென்று கொண்டு இருக்கிறது.
மருமகள்:
டிஆர்பி ரேட்டிங்கில் ‘மருமகள்’ சீரியல் இந்த வாரம் 7.87 புள்ளிகளை பெற்று நான்காம் இடத்தில் உள்ளது. இந்த சீரியல் கடந்த ஆண்டு தான் சன் டிவியில் ஒளிபரப்பினார்கள். ஆரம்பத்தில் இருந்து இந்த சீரியல் விறுவிறுப்பாக செல்கிறது. சீரியலில் பிரபு-ஆதிரை திருமணம் முடிந்தது. அதற்கு பின் அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் தான் விறுவிறுப்பாக செல்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் ஒன்று. தந்தையும் மகன்களுக்கும் இடையேயான பாச கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது சீரியலில் அரசி திருமணம் ட்ராக் தான் சென்று கொண்டிருக்கின்றது. அரசி, குமாரை திருமணம் செய்து கொண்டதால் பாண்டியன் குடும்பமே இடிந்து போயிருக்கிறது. இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 7.68 புள்ளிகளை பெற்று ஐந்தாம் இடத்திற்கு வந்திருக்கிறது.