டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியை அடித்து நொறுக்கி பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி சீரியல்கள் - டாப் 5 லிஸ்ட் இதோ
சீரியல் டிஆர்பி ரேட்டிங் டாப் 5 லிஸ்ட்
டிஆர்பி ரேட்டிங்கில் 2026 ஆம் ஆண்டில் முதல் வாரத்தில் டாப் 5 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வருடமாகவே ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது.
வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு வரை சீரியல்கள் வரிசை கட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் டிவி திகழ்கிறது. எப்போதும் இந்த இரு சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. அதோட டிஆர்பி ரேட்டிங்கில் கூட இந்த இரு சேனல்களின் சீரியல்கள் தான் மாறி மாறி முதலிடம் பிடிக்கிறது. அந்த வகையில் இந்த 2026 ஆம் ஆண்டின் 23வது வாரத்தில் டிஆர்பியில் முதல் ஐந்து இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் பார்க்க போகிறோம்.
மூன்று முடிச்சு:
மூன்று முடிச்சு சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 9.01 புள்ளிகளை பெற்று இந்த வாரம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலில் ஸ்சுவாதி கதாநாயகியாகவும், இவருக்கு ஜோடியாக சீரியலில் நிவாஸ் நடிக்கிறார்கள். இந்த சீரியல் தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சீரியலில் நந்தினி-சூர்யா திருமணத்தால் சூர்யா அம்மா பயங்கர கோபத்தில் இருக்கிறார். இனி அவர் என்ன செய்வார்? என்ற ட்ராக்கில் தான் சென்று கொண்டு இருக்கிறது.
கயல் சீரியல் :
டிஆர்பி ரேட்டிங்கில் கயல் சீரியல் இந்த வாரம் 7.76 புள்ளிகளை பெற்று 2ம் இடத்தில் இருக்கிறது. தனது குடும்பத்திற்காக எல்லா சந்தோசத்தை இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை தான் கயல் சீரியல். அடுத்தடுத்து கயலுக்கு பல தொந்தரவுகள் வந்த நிலையில் தற்போது கயலின் திருமண வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை கொண்டு இந்த தொடரை ஒளிபரப்பி வருகிறார்கள்.
அய்யனார் துணை:
டிஆர்பி ரேட்டிங்கில் ‘அய்யனார் துணை’ சீரியல் இந்த வாரம் 7.58 புள்ளிகளை பெற்று 3ம் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ஒளிபரப்பான இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இது சகோதர்களின் பாச போராட்ட கதை. தற்போது சீரியலில் நிலா- சோழன் திருமண ட்ராக் சென்று கொண்டிருக்கின்றது.
சிறகடிக்க ஆசை :
டிஆர்பி ரேட்டிங்கில் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் இந்த வாரம் 7.01 புள்ளிகளை பெற்று 4ம் இடத்தில் உள்ளது. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. முத்து-மீனா வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த கதை. தற்போது சீரியலில் சத்யா-ரேகா திருமணம் ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது.
மருமகள்:
டிஆர்பி ரேட்டிங்கில் ‘மருமகள்’ சீரியல் இந்த வாரம் 6.93 புள்ளிகளை பெற்று 5ம் இடத்தில் உள்ளது. இந்த சீரியல் கடந்த 2024 ஆம் ஆண்டு தான் சன் டிவியில் ஒளிபரப்பானது. ஆரம்பத்தில் இருந்து இந்த சீரியல் விறுவிறுப்பாக செல்கிறது. சீரியலில் பிரபு-ஆதிரை திருமணம் முடிந்தது. அதற்கு பின் அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் தான் விறுவிறுப்பாக செல்கிறது.