தவெக getout உறுதிமொழி: கையெழுத்து போட மறுத்த பிரசாந்த் கிஷோர் - வைரலாகும் வீடியோ
தவெகவின் கையெழுத்து இயக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்து போட மறுத்து இருக்கும் தகவல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடைசியாக விஜயின் நடிப்பில் வெளியாகியிருந்த ‘கோட்’ படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது.
இந்த படத்தை தொடர்ந்து தற்போது ‘தளபதி 69’ என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இது தான் இவரின் கடைசி படம். இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் இவர் அரசியலுக்கு வருவது சந்தோசத்தை கொடுத்து இருக்கிறது. இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து விஜய் அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
விஜய் அரசியல்:
அதன் பின் இவர் தன் கட்சியின் கொடி, பாடல், உறுதிமொழி, கொள்கை எல்லாம் அறிவித்து இருந்தார். மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் இவர் தன்னுடைய முதல் மாநாட்டை பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் நடத்தி இருந்தார். இதை பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். அதோடு வருகிற 2026 ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் விஜய் அறிவித்து இருந்தார். அதன் பின் தன் கட்சிக்காக புது செயலியை உருவாக்குவதாக அறிவித்து இருந்தார்.
விஜய் கட்சி இரண்டாம் ஆண்டு விழா:
இதை அடுத்து தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்து இருக்கிறது. இதனால் கட்சி அலுவலகத்தில் விழா நடத்தி இருந்தர்கள். மேலும், இது தொடர்பாக விஜய் அவர்கள் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதை தொடர்ந்து இவர் தன் கட்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் தான் நடிகர் விஜய் அவர்கள் தன்னுடைய கட்சியின் நிர்வாகிகளை நியமித்து இருந்தார்.
கையெழுத்து இயக்கம்:
இந்த நிலையில் தவெக நடத்திய கையெழுத்து பேனர் இயக்கம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தவெக சார்பில் விழா நடைபெற்று இருந்தது. இதில் கெட் அவுட்(getout) பேனர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த பேனரில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. அதில், தமிழக வெற்றிக் கழகத்தினர் அனைவருமே கையெழுத்து போட்டார்கள். ஆனால், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மட்டும் கையெழுத்து போடவில்லை.
https://youtube.com/shorts/gU13u_NkDl8?si=4fqhRVfBcgISHgcl
பிரசாந்த் கிசோர் செய்த செயல்:
அவர், நோ நோ நான் போடவில்லை என்று சொல்லி இருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேனரில், புதிய கல்வி கொள்கை, மும்மொழி திட்ட திணிப்பு, அரசியல் கோழைத்தனம், வாக்கு வங்கிகளுக்காக ஜாதி மற்றும் மற்ற சீர்கேடுகளை எதிர்க்க அஞ்சும் நயவசகம் ஆகியவற்றுக்கு எதிராக போராட உறுதி ஏற்போம் என்று எழுதப்பட்டிருக்கிறது. இது மத்திய. மாநில அரசுக்கு எதிராக நடத்தப்பட்டு இருக்கிறது.