சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் ரிலீஸ் தேதி சொல்லலாமா? - விஜயை விமர்சிக்கும் பாஜக தமிழிசை சௌந்தரராஜன்

By subhashini · 8/1/2026

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், கௌதமேனன், பிரியாமணி உட்பட பாபி நடித்து இருக்கிறார்கள். தெலுங்கில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான KVN தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. மேலும், இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதை அடுத்து ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் படம் வெளியாக தாமதமாகுவதால் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. மேலும், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்கான தீர்ப்பு ஜனவரி ஒன்பதாம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார். இதை அடுத்து படத்தினுடைய ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக படத்தினுடைய தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

ஜனநாயகன் படம்:

சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதமாவதற்கெல்லாம் காரணம் அரசியல் ரீதியாக நடக்கும் பழிவாங்கல் செயல் என்றெல்லாம் சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்ட பதிவில், இந்த உலகமே மதிக்கும் மிகப்பெரிய ஜனநாயகன் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி தான். ஜனநாயக முறைப்படி நடக்கும் மதிப்பிற்குரிய ஜனநாயகனும் நமது பாரத பிரதமர் தான். ஆனால், காங்கிரஸ்காரர்கள் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததற்கு மத்திய அரசையும், பிரதமரையும் குறை சொல்லி மக்களை திசை திருப்பி கொண்டிருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=iNtI_6JL4I4

தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி:

நேற்று இந்த வழக்கு மன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த சென்சார் சர்டிபிகேட்டுக்கும் மத்திய அரசிற்கும் எந்த தொடர்பு இல்லை என்று தெளிவாக வலியுறுத்தப்பட்டது. கலையில் இருந்து அரசியலை விலக்கி வைப்போம் என்று காங்கிரஸ் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கிறது. படங்களை நேரடியாக தடை செய்த வரலாறு காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. இது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம். எல்லாவற்றிற்கும் மேலாக திமுகவின் இளங்கோவன் அவர்கள் திரைத்துறைக்கு அழுத்தம் தருவதால் அரசியலில் வென்றுவிட முடியாது என்று சொல்கிறார்.

https://www.youtube.com/watch?v=0noWlda1OFk

ரிலீஸ் சர்ச்சை:

அதுவும் உதயநிதி எவ்வளவு திரையரங்குகள் கிடைக்க செய்வதில் கூட இவர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை. சட்ட ரீதியாக CBFC செயல்படுகிறது. அதன் நடைமுறையை அரசியலாக்கி கொண்டிருக்கிறார்கள். விஜய் அரசியலுக்கு வருவது தவறு கிடையாது. ஆனால், அவர் படம் அரசியல் ஆக்கப்படுவது தான் வேடிக்கையான வேடிக்கை. சட்டரீதியாக சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் ஒரு வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு அதற்கு பிறகு அழுத்தம் கொடுப்பது சரியான நடைமுறை கிடையாது. சட்டரீதியான நடைமுறைகளுக்கு பின் ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் தினத்தை நாங்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full