தமிழ்நாடு அரசின் விருது வாங்கும் நடிகர், நடிகைகள் யார் தெரியுமா? முழு பட்டியல் இதோ

By subhashini · 30/1/2026

தமிழ்நாடு அரசு சார்பில் விருதுகளை வாங்கிய பிரபலங்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.சமூக சிந்தனைகளுடன் மனிதநேயத்தை பிரதிபலிக்கும் படங்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த படங்கள், நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர்களுக்கு
தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. அது மட்டுமில்லாமல் சின்ன திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சிறந்த தொடர்கள், கதாநாயகன், கதாநாயகி, சிறந்த சாதனையாளர், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் உட்பட பல பிரிவுகளில்
சின்னத்திரை விருதுகளும் வழங்கப்படுகின்றது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு 2016-2022 ஆம் ஆண்டுகளுக்கான அரசு திரைப்பட விருதுகள், 2014-2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், 2015-16 முதல் 2021-2022 வரையான கல்வி ஆண்டுகளுக்குரிய எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் ஆகியவற்றை அறிவித்திருக்கிறது. இந்த நிகழ்வு சென்னை கலைவாணர் அரங்கத்தில் வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது.

தமிழ்நாடு அரசு விருது:

இந்த விழாவை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் துவக்கி வழங்குகிறார்.
அதோடு இடையில் வழங்கப்படாமல் இருந்த விருதுகள் அனைத்தையுமே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆணையிட்டு இருக்கிறார். அதன்படி 2009ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டுகள் வரை வழங்கப்படாமல் இருந்த அனைத்து திரைப்பட விருதுகளும் வழங்கப்படுகிறது. மொத்தம் 183 திரைத்துறை சார்ந்த விருதுகளும், 101 சின்னத்திரை சார்ந்த விருதுகளும் கொடுக்கப்படுகிறது.

திரைப்பட விருதுகள்:

2016:

சிறந்த படம் – முதல் பரிசு - மாநகரம்

சிறந்த படம் – இரண்டாம் பரிசு - புரியாத புதிர்

சிறந்த படம் – மூன்றாம் பரிசு - மாவீரன் கிட்டு

சிறந்த படம் (சிறப்பு) - மனுசங்கடா

பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படம் - அருவி

சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி (புரியாத புதிர்)

சிறந்த நடிகை - கீர்த்தி சுரேஷ் (பாம்பு சட்டை)

சிறந்த இயக்குநர் - லோகேஷ் கனகராஜ் (மாநகரம்)

2017:

சிறந்த படம் – அறம்
சிறந்த நடிகர் – கார்த்தி
சிறந்த நடிகை – நயன்தாரா

2018ல்

சிறந்த படம் – பரியேறும் பெருமாள்
சிறந்த நடிகர் – தனுஷ்
சிறந்த நடிகை – ஜோதிகா

2019ல்

சிறந்த படம் – அசுரன்
சிறந்த நடிகர் – ஆர். பார்த்திபன்
சிறந்த நடிகை – மஞ்சு வாரியர்

2020ல்

சிறந்த படம் – கூழாங்கல்
சிறந்த நடிகர் – சூர்யா
சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி

2021ல்

சிறந்த படம் – ஜெய் பீம்
சிறந்த நடிகர் – ஆர்யா
சிறந்த நடிகை – லிஜோ மால் ஜோஸ்

2022ல்

சிறந்த படம் – கார்கி
சிறந்த நடிகர் – விக்ரம் பிரபு
சிறந்த நடிகை – சாய் பல்லவி

சின்னத்திரை விருதுகள் :

2014ல்

சிறந்த தொடர் – அழகி
சிறந்த நடிகர் – எம். ராஜ்குமார்
சிறந்த நடிகை – ஆர். ராதிகா சரத்குமார்

2015ல்

சிறந்த தொடர் – ரோமாபுரி பாண்டியன்
சிறந்த நடிகர் – ஆர். பாண்டியராஜன்
சிறந்த நடிகை – சானியா போஜன்

2016ல்

சிறந்த தொடர் – ராமானுஜர்
சிறந்த நடிகர் – கௌசிக்
சிறந்த நடிகை – நீலிமா ராணி

2017ல்

சிறந்த தொடர் – நந்தினி

2018ல்

சிறந்த தொடர் – பூவே பூச்சூடவா

2019ல்

சிறந்த தொடர் – செம்பருத்தி

Tamil Behind Talkies AMP · Quick view
View full