ஒருவழியா எனக்கு வீடு தந்துட்டாங்க - எமோஷனலாக நடிகர் ராஜசேகர் மனைவி தாரா சொன்னது

By subhashini · 15/5/2026

தென்னிந்திய சினிமா உலகில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ராஜசேகர். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி இருந்தார். பின் இவர் சின்னத்திரையில் நடிகராகவும் நடித்து இருந்தார். இதனிடையே இவர் தாரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் நடிகர் ராஜசேகர் அவர்கள் 2019ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். இறப்பதற்குள் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது தான் இவரின் கடைசி ஆசையாம். இதனால் அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான் சென்னை வடபழனியில் 500 சதுர அடியில் ஒரு பிளாட்டை வாங்கி இருந்தார்.

அந்த வீட்டில் வாங்கி குடியேறுவதற்குள் ராஜசேகர் இறந்துவிட்டார். அதனைத் தொடர்ந்து அவருடைய உடல் மட்டுமே சில மணி நேரம் அந்த வீட்டில் வைக்கப்பட்டு எடுத்து செல்லப்பட்டது. மேலும், உறவுகளின் ஆதரவு இல்லாத நிலையில் தனி மனுஷியாக வேதனையில் இருக்கிறார் தாரா. இவர் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் அவர் சம்பாதித்த மொத்த பணத்தையும் குடும்பத்துக்காக செலவு செய்து விட்டார். அதோடு பேங்கில் மீதி பணம் கட்ட சொல்லி டார்ச்சர் செய்தார்கள் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக பேட்டியில் தாரா கூறி இருந்தார்.

ராஜசேகர் தாரா:

பின் கடன் கொடுத்த வங்கி ராஜசேகரன் வீட்டை ஏலத்தில் விடுவதாக நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள். தாரா பேங்க் அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று எவ்வளவோ அலைந்து திரிந்தும் முடியவில்லை. ஒரு கட்டத்தில் வீட்டிற்கு சீல் வைத்து ஏலத்திலும் விட்டார்கள். தாராவை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்கள். அதோடு தாராவுடைய சில ஆவணங்களும் அங்கே மாட்டி விட்டது. இருந்தாலும் தாரா வீடு கேட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து இருந்தார். சமீபத்தில் கூட ராஜசேகருக்கு தமிழக அரசின் சார்பாக விருது வழங்கப்பட்டிருந்தது. அப்பொழுது தாரா தனக்கு வீடு இல்லாமல் கஷ்டப்படும் நிலைமையை சொல்லி எடுத்து புரிய வைக்கிறார்.

தாராவுக்கு கிடைத்த வீடு:

வீட்டுக்கான ஏற்பாடு செய்து தருகிறோம் என்று அரசியல்வாதிகளும் அதிகாரிகளுமே வாக்குறுதி கொடுக்கிறார்கள். ஆனால், கடைசிவரை செய்ய முடியவில்லை. இதனால் ரொம்பவே மனமுடைந்து தாரா அழுதார். இதை அடுத்து ஒரு வழியாக போராட்டங்களுக்கு பிறகு தாராவுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை கோட்டூர் புறத்தில் வீடு மனை ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் அவருக்கு இந்த வீட்டுமனையை தமிழக அரசு ஒதுக்கி தந்துள்ளது.

தாரா பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் தாரா, என்னுடைய வீடு நிலத்தில் போனதிலிருந்து தெரிந்தவர்கள் வீடுகளில் தான் தங்கிக் கொண்டு வருகிறேன். வீட்டு வசதி வாரியம் மூலமாக ஒரு வீடு வாடைக்காவது ஒதுக்கி தர சொல்லி முதலமைச்சர் தனிப்பிரிவு உட்பட நிறைய இடங்களுக்கு மனு கொடுத்தேன். வீடு கிடைக்கிற மாதிரி சில நடவடிக்கைகள் நடக்கும். பிறகு ஏதாவது தடை வந்து நடக்காமல் போய்விடும். இப்படி இழுத்துக் கொண்டு போனதால் எனக்கு நம்பிக்கையே போய்விட்டது. அதே நேரம் சில பிரபலமான பத்திரிகைகள் எனக்கு பெரிய உதவியை செய்தது. நான் பேசியதை பார்த்துவிட்டு தான் முதல்வர் அலுவலகத்தில் இருந்து பேசினார்கள். எப்படியோ பண்ணின முயற்சிக்கு பலன் கிடைத்தது. ரொம்பவே நன்றி என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full