சிவக்கார்த்திகேயன், சூர்யா, சிம்புவ இப்படியா கலாய்ப்பீங்க..! தமிழ்ப்படம் 2 புதிய டீசர்.!
தமிழில் 2010 ஆம் ஆண்டு முழு நீள காமெடி படமாக வெளிவந்த படம் " தமிழ் படம் ". புதுமுக இயக்குனர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்திருந்தார். லாஜிக் இல்லா காமெடியால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தமிழ் படம் பாகம் 1- இல் பல்வேறு தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் செய்த பல்வேறு மாஸ் சீன்களை செம கலாய் கலைத்திருப்பார் நடிகர் சிவா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை உதயநிதியின் ஒய் நாட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கனவே ரஜினி முதல் டிரம்ப் வரை டீசரில் வெச்சு செய்த இவர்கள் தற்போது புதிய டீசரை வெளியிட்டுள்ளனர்.
[embed]https://youtu.be/BPcEcDdEF30[/embed]
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசரில் பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களை பாரபட்சம் பார்க்காமல் கலாய்த்திருந்தனர். இந்த டீசர் மூலம் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான ஆர்வம் மேலும் அதிகரித்தது. இந்நிலையில் இந்த படத்தின் மற்றுமொறு டீஸர் தற்போது வெளியாகி உள்ளது.
இதில் சூர்யா நடித்த "24" படத்தின் பேசிக்கலி அம் ஏ வாட்ச் மெக்கானிக் என்ற வசனத்தை கலாய்க்க துவங்கி, பின்னர் ஜி வி பிரகாஷ் , சிவகார்த்திகேயன், விக்ரம் என கலாய் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. இந்த படத்தின் முதல் டீஸர் விரும்பபட்டது போலவே தற்போது வெளியாகியுள்ள இந்த டீசரும் சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.