GST, Modi, 15-Lak Bank Balance, HipHop Tamizha, Jallikattu.! வெச்சு செஞ்சிருக்காங்க.! தமிழ் பட 2 நிமிட காட்சி.!

By Ajju · 9/7/2018
இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள "தமிழ் படம் 2" படத்திற்க்காக தான் ரசிகர்கள் அணைவரும் வெய்டிங். இதற்கு முக்கியகாரணம் சமீப காலமாக வெளியாகி வரும் இந்த படத்தின் போஸ்டர்களும், டீசரும் தான். [embed]https://youtu.be/5qwvlyR4MiA[/embed] தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் துவங்கி ஹாலிவுட் வரை உள்ள அணைத்து படங்களையும் கலாய்த்து இந்த படக்குழு வெளியிட்டு வரும் போஸ்டர்கள் ரசிகர்களை கவர்ந்த வண்ணம் இருக்கிறது. இதுவரை தமிழில் ஏற்கனவே வெளியான படங்களை தான் இவர்கள் கலாய்த்து வந்தனர். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான பாடல் ஒன்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு நிமிட காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பிரதமர் மோடி, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் ஆதி, ஹிப் ஹாப் தமிழா, நடிகர் ராகவா லாரன்ஸ் போன்றவர்களை பங்கமாக கலாய்த்துள்ளனர். வெறும் 2 நிமிடம் வெளியான கட்சியிலேயே இத்தனை நபர்களை கலாய்த்துள்ளார்கள் என்றால், படத்தில் எத்தனை பேரை கலாய்த்திருப்பார்கள் என்று இந்த படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் மேலும், அதிகரித்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் இந்த படம் வெளியாவதற்குள் இன்னும் யாரை எல்லாம் கலாய்க்க போகிறார்களோ என்பது படக்குழுவிற்கேய வெளிச்சம்
Tamil Behind Talkies AMP · Quick view
View full