5 நாள்ல இது நடக்கலன என் 2 கோடி சொத்த எழுதி வைக்கிறேன்னு சொன்னேன் - தமிழா தமிழா ஜோதிடர் பேட்டி.

By Rajkumar · 9/9/2023

அன்னைக்கே சொன்னேன் என்று மாரிமுத்துவின் இறப்பு குறித்து ஜோதிடர் மகரிஷி அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் மாரிமுத்துவின் இறப்பு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. நேற்று காலை மாரடைப்பு காரணமாக மாரிமுத்து திடீர் மரணமடைந்தார். டப்பிங் பேசிக்கொண்டு இருக்கும் போது அவருக்கு நெஞ்சு வலி வந்து இருக்கிறது. உடனே அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

View this post on Instagram

A post shared by Vikram Buddhanesan (@vsb_dentist)

இவரின் இழப்பு பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இவருடைய மறைவிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்களை பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அதோடு மாரிமுத்துவின் இறப்பு குறித்து சோசியல் மீடியாவில் பலவிதமான தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சியில் ஜோதிடர் சொன்னது போலவே நடந்து விட்டது என்று நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதாவது, கடந்த மாதம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழா தமிழா நிகழ்ச்சியில் மாரிமுத்து பங்கேற்று இருந்தார்.

அப்போது அவருக்கும் ஜோதிடர்களுக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் ஏற்பட்டிருந்தது. அப்போது ஜோதிடர் ஒருவர், மாரிமுத்துவின் பிறந்த தேதி குறித்து கேட்டு அவரைப் பற்றி கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் உங்களுக்கு இடுப்புக்கு மேல் பிரச்சனை இருக்கிறதா? என்று கேட்க மாரிமுத்து இல்லை என்றவுடன் உங்களுக்கு இடுப்பிற்கு மேல் பிரச்சனை இருக்கிறது என்று சொன்னவுடனே மாரிமுத்து வேடிக்கையாக இடுப்பிற்கு மேல் இதயம் தான் இருக்கிறது என்று கூறியிருந்தார்.

https://www.youtube.com/watch?v=UVZ1u8II7yw

தற்போது இதை தான் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து ஜோதிடர் சொன்னது உண்மையாலுமே பலித்து விட்டது என்று கமெண்ட் போட்டு இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் மாரிமுத்துவிடம் ஆக்ரோஷமாக விவாதம் செய்த ஜோதிடர் மகரிஷி கே ஆர் மந்த்ராச்சலம் தற்போது பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், நடிகர் மாரிமுத்து மறைவிற்கு ஜோதிடர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாபெரும் கலைஞரை தமிழகம் இழந்து விட்டது. நிகழ்ச்சியில் எங்களுக்குள் நடந்த விவாதம் உண்மை தான். அவரும் பேச நானும் பேசிருந்தேன். அவர் ஒருமையில் பேசியிருந்தால் இருந்தாலும் நாங்கள் மரியாதை கொடுத்து தான் பேசி இருந்தோம். பிறகு அவரே மன்னித்து விடுங்கள் என்று மன்னிப்பு கேட்டார். நிகழ்ச்சியில் நான் சொன்னது நடக்கவில்லை என்றால் நான் சேர்த்து வைத்த மொத்த சொத்து இரண்டு கோடி ரூபாய் தருகிறேன் என்று சொன்னேன். அவர் அது எல்லாம் வேண்டாம். இது வெறும் நிகழ்ச்சி தான். மன்னித்து விடுங்கள் இந்த பிரச்சனை இதோடு முடித்து விடலாம் என்று சொல்லிக் கிளம்பிவிட்டார்.

https://www.youtube.com/watch?v=TidFQoAz0kQ

நாங்களும் நிகழ்ச்சிக்கு பிறகு அதோடு விட்டு வந்து விட்டோம். அதற்குப் பிறகு இது தொடர்பாக ஜோதிடர்கள் சார்பில் மாரிமுத்து மீது வழக்கு தொடர்ந்து பிரச்சனை செய்திருந்தார்கள். நான் கூட மாரிமுத்துவுக்கு ஆதரவாக கூட பேட்டி கொடுத்து இருந்தேன். இது வெறும் நிகழ்ச்சி. அவர் மீது வழக்கு தொடர்வது சரியான ஒன்று கிடையாது. அவர் அப்போதே மன்னிப்பு கேட்டுவிட்டார் என்றெல்லாம் பேசி இருந்தேன். தற்போதும் ஒரு இறந்தவரை போய் தவறாக பேசுவது சரியானது கிடையாது என்று பேசி இருக்கிறார். தற்போது இவர் பேசிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full