சொல்லுது சார், சொல்லுது, சொல்லுது' - தமிழா தமிழா வைரல் ஜோடியின் ஓப்பன் பேட்டி
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தமிழில் தமிழா. இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியைப் போல விவாத மேடை ஆகும். முதலில் இந்த நிகழ்ச்சியை இயக்குனர் கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கியிருந்தார். சில சர்ச்சையின் காரணமாக இவர் நிகழ்ச்சியை விட்டு விலகி விட்டார்.
தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை youtube சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் மனைவியின் குழந்தை தனத்தை ரசிப்பதா? வெறுப்பதா? என்பது குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பிரபாகரன், என்னுடைய மனைவி வீட்டில் ஐஸ்கிரீமை சூடு செய்து தான் சாப்பிடுவார்.
தமிழா தமிழா நிகழ்ச்சி:
வெளியில் ஹோட்டல் போனாலும் சூடு பண்ணி தான் சாப்பிடுவார் என்று சொல்லும் போது அவருடைய மனைவி ரதி, அப்படி சாப்பிடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்களும் சாப்பிட்டு பாருங்கள் என்று சொல்வார். இப்படி இவர்கள் பேசியிருந்த வீடியோ தான் இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. இதை பலர் கிண்டல் கேலி செய்து இருந்தார்கள் . இந்நிலையில் இது குறித்து பேட்டியில் பிரபாகரன்- ரதி கூறியிருப்பது, ரீல்ஸ் என்றால் என் மனைவிக்கு ரொம்ப பிடிக்கும். அவள் பயங்கரமாக எக்ஸ்பிரஸிவ். நான் அவளுக்கு அப்படியே ஆப்போசிட் தான். இருந்தாலுமே, நாங்கள் இருவரும் ரிலீஸ் பண்ண ஆரம்பித்தோம்.
பிரபாகரன்-ரதி பேட்டி:
அதை பார்த்துவிட்டு தான் ஜீ தமிழ் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கூப்பிட்டார்கள். அப்போது இன்ட்ரோவேர்ட் Vs எக்ஸ்ட்ரோவேர்ட் டாபிக் கொடுத்தார்கள். அந்த சமயம் நாங்கள் ஊரில் இருந்ததால் எங்களால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. தொடர்ந்து நாங்கள் தொடர்பில் இருந்ததால் தான் எங்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்து நாங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். எங்க இரண்டு பேருக்குமே பக்கா அரேஞ்ச் மேரேஜ். அறந்தாங்கி பக்கத்தில் உள்ள ஒரு சின்ன கிராமம். கல்யாணம் ஆகி எங்களுக்கு இரண்டு வருடம் ஆகிறது.
🤣🤣🤣#தமிழாதமிழா#zeeதமிழ் pic.twitter.com/LPwCertiiW
— ItsmePriyanjali (@IPriyanjali) August 28, 2024
வாழ்க்கை குறித்து சொன்னது:
ஆரம்பத்தில் இவள் பண்ணுவது எல்லாம் எனக்கு புதுசாக இருந்தது என்று சொல்ல, உடனே ரதி, நான் ஒரே பொண்ணு என்பதால் என்னை கைக்குள்ளே வைத்து வளர்த்து விட்டார்கள். எங்க ஃபேமிலில எல்லோருமே எக்ஸ்பிரஸிவ் தான். நான் எங்க வீட்டில் எப்படி இருந்தேனோ? அப்படித்தான் இங்கேயும் இருக்கிறேன். எந்த வித்தியாசமும் கிடையாது. அந்த நிகழ்ச்சியில் ஐஸ்கிரீம் பற்றி பேசியது இவ்வளவு வைரலாகும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. டைம் லிமிட் என்பதால் பாதியிலேயே நாங்கள் பேசியதை கட் பண்ணி விட்டார்கள்.
https://www.youtube.com/watch?v=N_ae8P4ftv4
நிகழ்ச்சி குறித்து சொன்னது:
எனக்கு சளி பிடிக்கும். அதனால் ஐஸ்கிரீமை மெல்ட் பண்ணி சூடா சாப்பிடுவேன் என்பதை அங்கு நான் சொன்னேன். ஹோட்டலில் சுடு தண்ணீர் வாங்கி ஐஸ்கிரீம் மெல்ட் பண்ணா சீக்கிரம் மெல்ட் ஆகிவிடும் என்பதை பாயிண்ட் ஆஃப் வியூவில் தான் சொன்னேன். அதே மாதிரி கல்யாணம் ஆன பிறகு பொண்ணுங்க அவங்க வீட்டை ரொம்பவே மிஸ் பண்ணுவாங்க. நான் பட்ஜெட் ஃப்ரெண்ட்லி ஒய்ஃப். கமெண்ட்ஸ் ரொம்பவே என்னுடைய கணவரை பாதிக்கும். ஆனால், அதை நான் சீக்கிரமாகவே ஹேண்டில் பண்ணுவேன். அதே மாதிரி, நெகட்டிவ் கமென்ட்ஸ் ஹாப்பியா அக்சப்ட் பண்ணிக்கவேன் என்று கூறி இருக்கிறார்.