உண்மையான 'கெத்து' இவர் தான் - 'லப்பர் பந்து' படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து பகிர்ந்த தகவல்
ரியல் கெத்து பற்றி இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த படம் தான் ‘லப்பர் பந்து’. இந்த படத்தை எஸ்.லட்சுமணன் குமார் தயாரித்திருந்தார். இந்த படத்தில் ஹரிஷ் குமார் அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா, சஞ்சனா, பால சரவணன், டி எஸ் கே ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசை அமைத்திருந்தார். மேலும், சமூகத்தில் நடக்கும் ஆதிக்கத்தையும் எதார்த்தமாக கூறியிருக்கும் இப்படம் பலரது பாராட்டுகளை அள்ளி இருக்கிறது. இந்த படத்தை பார்த்து வெற்றி மாறன், ரஞ்சித், சிவகார்த்திகேயன், இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி, ஹர்பஜன் சிங் என பல பிரபலங்கள் பாராட்டி இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் அதிகம் பேசப்பட்ட கதாபாத்திரம் அட்டகத்தி தினேஷ் நடித்த கெத்து கதாபாத்திரம் தான்.
லப்பர் பந்து:
இந்த படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். அட்டகத்தி தினேஷ் ஆக இருந்தவர் இந்த படத்தின் மூலம் கெத்து தினேஷ் ஆக மாறியிருக்கிறார். அதோடு இந்த படத்தில் அவர் என்ட்ரி கொடுக்கும் போது வரும் விஜயகாந்தின் 'நீ பொட்டு வைத்த தங்க குடம்' படம் வேற லெவலில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருந்தது. இப்படி இந்த அளவிற்கு இவர் பிரபலமாவதற்கு காரணம் கெத்து கதாபாத்திரம் தான். இந்நிலையில் உண்மையான கெத்து நபர் குறித்து இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து சொன்னது:
அதாவது, சமீபத்தில் நடந்த விழா ஒன்று ஒன்றில் கலந்து கொண்ட லப்பர் பந்து படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து, இந்த படத்திற்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்த உண்மையான கெத்து நபரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். பின் அவர், இந்த படத்தின் கதையை எழுத இன்ஸ்பிரேஷன் இவர் தான். என் கண் முன்னே இவர் மைனா மைதானத்தில் விளையாடும்போது அவருடைய மனைவி அடி வெளுத்து வாங்கிய சம்பவம் தான் இந்த படத்தை எழுத தோன்றியது. அன்று முழுவதுமே விளையாட்டு முடியும் வரை அவரை நான் கெத்தாக தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ரியல் கெத்து:
கையில் அவார்ட் உடன் நின்று கொண்டிருந்த அவருக்கு பின்னால் திடீரென்று அவருடைய மனைவி வந்து கையில் குழந்தையுடன் துரத்தி துரத்தி அடித்தார். இந்த சம்பவத்தின் மூலம் தான் நான் இந்த கதையை எழுத தொடங்கினேன். என்னை விட அவர் பத்து வயது அதிகம். இருந்தாலும், எங்கள் குழுவில் மூத்தவர் இவர் தான்.
இவரை ஊரில் எல்லோருமே தவக்களை என்று தான் சொல்வார்கள். படத்தில் வந்தது போல இவருமே ஒரு பெயிண்டர் தான். பயங்கரமாக கிரிக்கெட் விளையாடுவார். அவருடைய பக்கத்து ஊரிலுமே இவரை தவக்களை என்று தான் அழைப்பார்கள். நிஜமாகவே தன்னுடைய மனைவிக்கு தெரியாமல், வேலைக்கு போகாமல் கிரிக்கெட் விளையாடுவதை வேலையாக வைத்திருக்கிறார். வயது ஆனாலும் இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருப்பார் என்று கூறியிருக்கிறார்.
படத்தின் கதை:
படத்தில் அட்டகத்தி தினேஷ் கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டு இருக்கிறார். இவர் கிரிக்கெட்டில் பேட்டிங் ஆடுவதில் சிறந்த வீரராக இருக்கிறார். இவர் அடிக்கும் ஒவ்வொரு பந்துமே சிக்ஸர் தான். இவர் விளையாடும் டீம் தான் கோப்பையை தட்டிச் செல்லும். ஆனால், இவர் கிரிக்கெட் விளையாடுவது அவருடைய மனைவிக்கு பிடிக்கவே பிடிக்காது. இன்னொரு பக்கம் ஹரிஷ் கல்யாண் பந்துவீச்சில் பட்டய கிளப்புபவர். இவர் பந்து வீசினால் பேட்டிங் பண்ணும் போது அனைவருமே தடுமாறுவார்கள். இப்படி இருக்கும் சூழ்நிலையில் தினேஷ் ஆட்டத்தை தெரிந்த ஹரிஷ் கல்யாண் எப்படியாவது அவரை விக்கெட் எடுக்க வேண்டும் என்று வெறியுடன் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் போட்டா போட்டிகள், பொறாமைகள், சரிக்கு சரி என்று தன்னை நிரூபித்து காட்ட வேண்டும் என்ற வேட்கை என கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது.