'என்ன சிம்ரன் இதெல்லாம்' - தமிழும் சரஸ்வதியும் ராகினியின் போட்டோ ஷூட்டை கண்ட ஷாக்கான ரசிகர்கள்.

By subhashini · 31/3/2024

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகையின் கிளாமர் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் அஸ்ரிதா ஸ்ரீதாஸ். இவர் கேரளாவை சேர்ந்தவர். ஆனால், இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். இவர் கேரளா மற்றும் சென்னையில் உள்ள கல்லூரியில் தன்னுடைய மேற்படிப்பை முடித்தார். மேலும், இவருடைய அப்பா புரொடக்ஷன் மேனேஜர்.

இவருடைய அம்மாவும் சீரியல் நடிகை தான். இதனால் அஸ்ரிதா தன்னுடைய மூன்று வயதிலேயே மீடியாவிற்குள் வந்து விட்டார். இவர் முதன் முதலில் அப்பா அம்மா என்ற சீரியலில் தான் நடித்து இருந்தார். பின் இவருக்கு சீரியலில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் மாடலிங் வந்து விட்டார். இதுவரை இவர் 35க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கிறார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதையின் மூலம் அஷ்ரிதா மீண்டும் மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

அஷ்ரிதா குறித்த தகவல்:

இந்த சீரியலில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து இவர் சொந்த பந்தம், கல்யாணப்பரிசு, நாம் இருவர் நமக்கு இருவர், தேன்மொழி பி ஏ போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரை படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த கடல் கடந்த காவியம் என்ற படத்தில் இவர் நடித்திருந்தார்.

அஷ்ரிதா திரைப்பயணம்:

அதனை தொடர்ந்து இவர் சம்டைம்ஸ், தெகிடி, திருமணம் எனும் நிக்கா, ஆறாவது சினம், சில நிமிடங்களில், என்னை அறிந்தால், சிக்ஸர் , கொரில்லா, வனமகன் போன்ற பல படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், இவருக்கு பெரிய அளவு வரவேற்பு வெள்ளி திரையில் கிடைக்கவில்லை. கொரோனாவிற்கு பிறகு அஷ்ரிதா அவர்கள் சின்னத்திரை, வெள்ளி திரையில் பிஸியாக பயணித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் தமிழும் சரஸ்வதி என்ற தொடரில் ராகினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தமிழும் சரஸ்வதியும் சீரியல்:

இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் இந்த சீரியலில் ராகினி கதாபாத்திரத்திற்கு பெரியதாக முக்கியத்துவம் இல்லை என்றாலும் சில மாதங்களாகவே அவருடைய கதாபாத்திரம் தான் அதிகமாக பேசப்படுகிறது. காரணம், கோதை குடும்பத்தை பழிவாங்க ராகினியை பகடை காயாக வைத்து அர்ஜுன் ராகினியை திருமணம் செய்து கொள்கிறார். தற்போது மொத்த சொத்தையும் அர்ஜுன் ஏமாற்றி வாங்கியது ராகினிக்கு தெரிந்தும் திருப்பி தன்னுடைய அம்மாவிற்கு தராமல் இருக்கிறார்.

அஷ்ரிதாவின் கிளாமர் புகைப்படம் :

இதை அடுத்து என்ன நடக்கும் என்று சுவாரசியங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் அஷ்ரிதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் சினிமா நடிப்பு மட்டுமில்லாமல் தனியாக youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். இவர் தான் அடிக்கடி எடுக்கும் போட்டோ ஷூட் வீடியோக்கள் அனைத்தையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது அஷ்ரிதாவின் கிளாமர் புகைப்படம் தான் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலருமே வியப்பில் புகைப்படத்திற்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full