பிரபல தங்க நகை நிறுவனமான தனிஷ்க் நிறுவனம் வெளியிட்ட நகை விளம்பரம் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தொழில் நிறுவனமான டைடன் குழுவில் ஓர் அங்கம் தான் தனிஷ்க் நகை நிறுவனம். மேலும், தனிஷ்க் முதன்மை அலுவலகம் பெங்களுருவில் உள்ளது. இந்த நிறுவனம் 1980 இறுதியில் துவங்கப்பட்டு தற்பொழுது உலகமெங்கும் பல கிளைகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்பொழுது தனிஷ்க் விளம்பரம் ஒன்று சமீபத்தில் வெளியானது. இந்த விளம்பரம் தற்பொழுது மத சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இந்த விளம்பரத்தில் இந்து மதத்தை சேர்த்த கர்பிணி பெண்ணிற்கு முஸ்லீம் மதத்தை சேர்ந்த மாமியார் வளைகாப்பை நடத்துவது போன்று எடுக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் லவ் ஜிஹாத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த விளம்பரம் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டிங் ஆகிவிட்டது.மேலும், இந்த விளம்பரம் பெரிதும் சர்ச்சையை கிளப்பியதாள் தனிஷ்க் நிறுவனம் யூடுயூபிலிருந்து நீக்கியது.

Advertisement

மேலும், இந்து-முஸ்லீம் ஒற்றுமையை விலகும் வகையிலான விளம்பரத்தை நீக்கியதற்கு எதிப்பு தெரிவித்து எம் பி சசி தரூர் மற்றும் பலர் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார். ஒருபக்கம் இதை எதிர்த்து சிலரும் மேலும் ஆதரித்து சிலரும் என்று இந்த தனிஷ்க் விளம்பரம் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் தனிஷ்க் நிறுவனத்தில் தாக்குதல் நடந்துள்ளது.

குஜராத்தில் இருக்கும் தனிஷ்க் நிறுவனத்தில் மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த கும்பல் கடையின் மேலாளரை மன்னிப்பு கடிதம் எழுதுமாறு வற்புறுத்தி உள்ளது என்றும் செய்திகள் வெளியாகின. மேலும், அதில் மதச்சார்பற்ற விளம்பரத்தை ஒளிபரப்பியதன் மூலம் இந்துக்களின் உணர்வை புண்படுத்தியதற்காக கட்ச் மாவட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக இந்த கடிதத்தில் எழுதியதாகவும் செய்திகள் வெளியாகியது. ஆனால், அப்படி ஒரு தாக்குதல் நடைபெறவில்லை என்று குஜராத் போலீசார் தெரிவித்து உள்ளார்கள்.

Advertisement

Advertisement
Advertisement