தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள், கொடுமைப்படுத்துறாங்க - கண்ணீருடன் விஷால் பட நடிகை வெளியிட்ட வீடியோ
சொந்த வீட்டிலேயே டார்ச்சர் செய்வதாக விஷால் பட நடிகை வெளியீடு இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக தனுஸ்ரீ தத்தா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் விஷால் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் தீராத விளையாட்டுப் பிள்ளை.
இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மூன்று ஹீரோயினிகள் நடித்திருந்தார்கள். அதில் ஒருவர் தான் தனுஸ்ரீ தத்தா. இவர் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நியூஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்து கொண்டிருந்தார். அதில் அவர் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் முதல் 10 இடத்துக்குள் தான் வந்தார். அதோட அந்த போட்டியின் மூலம் அவருக்கு பாலிவுட்டில் நிறைய வாய்ப்புகள் கிடைத்தது.
இவர் ஆசிக் பனாயா அப்னே என்ற படத்தில் மூலம் தான் பாலிவுட் சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார். இந்த படம் பெரியளவு வரவேற்பு பெறவில்லை.
தனுஸ்ரீ தத்தா குறித்த தகவல்:
இருந்தாலுமே இந்த படத்தின் மூலம் தனுஸ்ரீ மிகப் பிரபலமானார். முதல் படத்திலேயே இவர் தைரியமாக கிளாமர் ரோலில் நடித்திருந்தார். இதை அடுத்து இவர்
பாகம் பாக், ரிஸ்க், குட்பாய் பேட் பாய், ஸ்பீடு, ராமா தி சேவியர், சாக் லே டீப் சீக்ரெட்ஸ், வீரபத்திரா என பல படங்களில் நடித்திருந்தார். பின் தமிழில் 2010 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் தனுஸ்ரீ நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தனுஸ்ரீ தத்தா சர்ச்சை:
இருந்தாலுமே இவருக்கு பெரிதாக தமிழில் பட வாய்ப்புகள் வரவில்லை. தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால் இவர் மீண்டும் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். அதை தொடர்ந்து இவர் சில படங்களில் தான் நடித்து வந்தார். அதற்குப்பின் இவர் சினிமாவிலிருந்து காண ஒதுங்கி விட்டார். இதற்கிடையில் இவர் நடிகர் நானா படேகர் மீது மீடு விவகாரத்தில் பாலில் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தது மிகப்பெரிய அளவில் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதற்குப்பின் தனுஸ்ரீ என்ன ஆனார் என்று கூட தெரியவில்லை.
தனுஸ்ரீ தத்தா வீடியோ:
இப்படி இருக்கும் நிலையில் தன்னை காப்பாற்றுங்கள் என்று கதறியபடி தனுஸ்ரீ தத்தா வெளியிட்டிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதில் அவர், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் என்னுடைய வீட்டுக்கு மேலேயும் கீழேயும் அதிகமாக சத்தம் கேட்கிறது. இதைப் பற்றி நான் வீட்டின் மேனேஜரிடம் புகார் அளித்துமே அவர்கள் எந்த நடவடிக்கை எடுக்க இல்லை. ஒரு கட்டத்தில் நான் புகார் அளித்து சோர்வாகி புகார் கொடுப்பதை நிறுத்திவிட்டேன். இப்போது அந்த சத்தங்களுடன் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
கதறி அழும் தனுஸ்ரீ தத்தா:
ஐந்து வருடங்களாக இந்த சத்தத்தால் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதோடு உடல் நிலையும் சரி இல்லாமல் போய்விட்டது. மன அழுத்தம் காரணமாக எனக்கு நிறைய பிரச்சனைகளும் வந்திருக்கிறது. அதோடு வீட்டு வேலை செய்வதற்கு ஆட்களை அழைத்து வந்தாலுமே தெரியாத நபர்களை தான் அழைத்து வருகிறார்கள். அவர்களால் நிறைய பிரச்சனை. இதனால் வீட்டில் வேலைக்கு கூட ஆளில்லாமல் என்னையே கொடுமைப்படுத்துகிறார்கள். இது தொடர்பாக நான் போலீஸ்சிலும் புகார் அளித்தேன். தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள் என்று கதறி அழுத வீடியோ வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து தனுஸ்ரீ தத்தாவிற்கு உதவி செய்யுங்கள் என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள்