இவர் தான் ரைசாவோட ஸ்வீட் ஆர்ட்டாம்.! ஏன்னு அவரே சொல்லியுள்ளார்.!

By Rajkumar · 29/1/2019

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பிறகு அதிகம் பிரபலமடைந்தவர் ரைசா தான். மாடலிங் துறையில் இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக, விளம்பரங்கள், படங்கள் என்று வாய்ப்புக்கள் இவரை தேடி வந்தது. அதன் பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான வி ஐ பி- 2 படத்தில் கூட கஜோலுக்கு உதவியாளராக நடித்திருந்தார்.

இதையும் படியுங்க : அட்டை படத்திற்கு வசீகர ஆடையில் போஸ் கொடுத்த ரைசா.! 

சமீபத்தில் இவரும் பிக் பாஸ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தற்போது 'ஆலிஸ்' என்ற படத்திலும் ஜிவி பிரகாஷுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

சமீபித்தில் நடிகை ரைசா வெளியே சென்ற போது உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுள்ளார். பின்னர் பில் கட்டும் போது தான் அவருடைய பர்ஸை வீட்லேயே விட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று திகைத்துள்ளார் ரைசா.

ஆனால், டாக்ஸி டிரைவர் ஒருவர் ரைசாவின் பில்லை செட்டில் செய்து உதவியுள்ளார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரைசா அந்த நபருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full