சூப்பர் சிங்கர் வீடு முதல் பிக் பாஸ் 50 லட்சம் வரை, பரித்தொகைகளுக்கு எவ்வளவு வரி? - இதோ விவரம்

By subhashini · 28/1/2025

விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 105 நாட்கள் நடந்து வெற்றிகரமாக சமீபத்தில் தான் முடிந்தது.
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி இருந்தார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி இருந்தது. மேலும், அனைவரும் எதிர்பார்த்தபடி முத்துக்குமரன் தான் டைட்டில் பட்டதை வென்று கோப்பையை வாங்கி இருந்தார்.

இவரை அடுத்து இரண்டாம் இடத்தை சௌந்தர்யா, மூன்றாம் இடத்தை விஷால், நான்காம் இடத்தை பவித்ரா, ஐந்தாம் இடத்தை ராயன் வென்று இருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னருக்கு 40 லட்சம் 50 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆனால், பிக் பாஸ் டைட்டில் வென்றவர்களுக்கு 50 லட்சம் தான்.

நிகழ்ச்சி பரிசு தொகை:

பணப்பெட்டி டாஸ்க்கில் எடுக்கப்பட்ட ஒன்பதரை லட்சத்தை கழித்துவிட்டு மீதி பணம் முத்துக்குமரனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பணப்பெட்டி டாஸ்கில் முத்து குமரன் 50000 ரூபாய் வென்றதால் அவருக்கு மொத்தம் 41 லட்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பரிசாக கொடுக்கப்படும் பணத்தை வாங்கும்போது அதற்கு வரி செலுத்த வேண்டும் என்று வருமானத் துறையினர் சட்டம் விதித்து இருக்கிறார்கள்.

வருமான வரி அதிகாரி பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பான கேள்விகளுக்கு பேட்டியில் ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரி, டிவி நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் போன்ற இந்த மாதிரி எதிலாவது பரிசுத்தொகை பெரிதாக கிடைத்துவிட்டால் வரி கட்டணும். அது ஒரு முறை கிடைத்தாலும் அதை வருமானம் ஆகத்தான் கணக்கிடுவார்கள்.

வருமான வரி பற்றி சொன்னது:

அப்படி வருமானமாக கணக்கிடும் போது அதற்கு குறிப்பிட்ட சதவீதம் வட்டி கட்டணம். ஆனால் அப்படி கட்டிய பணத்தில் ரீபண்ட் வாங்கலாம். அது பலருக்குமே தெரியவில்லை. அதாவது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்கு பயிற்சி எடுத்திருந்தால் அந்த நிகழ்ச்சிக்காக பயணம் செய்திருப்பார்கள். இதற்கு எல்லாத்துக்கும் ஆவணங்கள் சமர்ப்பித்து கிளைம் செய்து கொள்ளலாம்.

நிகழ்ச்சி வரி:


பரிசுத்தொகை வரியாக 30 முதல் 35 சதவீதம் வரை வரி பிடித்தல் இருக்கும். அதேநேரம் இதற்கு செலவழித்த பணத்தை ரீபண்ட் வாங்கலாம். பயிற்சிக்கு செலவழித்ததை மட்டும் இல்லாமல் ஏஜெண்டுகள் வைத்து ப்ரமோஷன் வேலைகள் செய்தாலும் அதையும் க்ளைம் செய்தலாம். அதில் சில கிளைம் ஏற்றுக் கொள்ள முடியும். சில செலவுகளை ஏற்றுக் கொள்ளாமல் போகலாம் என்று கூறி என்று கூறியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full