'தாதா' பஞ்சாயத்து, யோகி பாபு படத்துக்கு தடை விதித்த நீதிமன்றம் - இதுதான் காரணம்.

By Arun · 8/12/2022

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் யோகி பாபு. இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் படங்களில் நடித்து இருந்தார். பின்னர் காமெடியனாக கலக்கிய இவர் தற்போது பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். ற்போது யோகி பாபு இல்லாத படமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு பல படங்களில் யோகி பாபு நடித்துக் கொண்டிருக்கின்றார். மேலும், இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

https://www.youtube.com/watch?v=oQlNx8JRRzk

அதுமட்டும் இல்லாமல் இவரின் கால்சீட் கிடைக்காதா? என்று பல இயக்குனர்கள் ஏங்குகின்றனர். இவர் சமீபத்தில் வெளிவந்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே திரைபடத்தில் நடித்திருந்தார். இப்படம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு என்ற படத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். அதேபோல் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிஸ்ட் படத்திலும் யோகி பாபு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாதா சர்ச்சையில் சிக்கிய யோகி பாபு :

தற்போது யோகி பாபு அவர்கள் தாதா என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.இந்த படத்தில் ஹீரோவாக நிதின் சத்யா நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் தாதா படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்நிலையில் யோகி பாபு நடித்த தாதா படத்தின் மீது இயக்குனர் துரைராஜன் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், நான் நடிகர் நிதின் சத்யா, யோகி பாபு உள்ளிட்ட பல பேரை வைத்து ஐந்து கோடி ரூபாய் செலவில் மணி என்ற படத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு திரைப்படம் ஒன்றை எடுத்திருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=TNepcZMBx9Y&t=12s

இந்த திரைப்படத்தை சென்சார் செய்து ஹார்ட் டிஸ்கில் வைத்திருந்த போது கிஷோர் என்பவர் அந்த படத்தை திருடி சென்று தாதா என்ற பெயரில் அதை வெளியிட முயற்சிக்கிறார் என்று கூறி இருந்தார். இதனை தொடர்ந்து துரைராஜாவின் வழக்கறிஞர் யோகி பாபுவிடம் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அந்த ஆடியோவையும் பத்திரிகை சந்திப்பில் சமர்ப்பித்து இருக்கிறார். அதில் அவர், தாதா படத்தில் நான் ஹீரோ இல்லை. நான் நடித்தது மணி படம் தான். தாதா படத்தில் நான் நடிக்கவில்லை.

அந்த இயக்குனர் என்னுடைய புகைப்படத்தை போட்டு ஏன் இப்படி செய்தார்? என்று தெரியவில்லை என்று யோகிபாபு கூறி இருக்கிறார். இதனை தொடர்ந்து தாதா படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் கூறி இருப்பது, துரைராஜன் என்பவர் என்னுடைய படத்தில் எடிட்டராக வேலை செய்தவர். அவர் நான் எடுத்த படத்தை எடிட்டிங் செய்து வைத்து இப்படி எல்லாம் பொய் புகார் அளித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் யோகி பாபு இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=kuAyX0XZxMg

டப்பிங் பேச வராததால் எங்களுக்கும் அவருக்கும் சில பிரச்சனைகள் ஏற்பட்டது அப்போது அவரை அடித்ததால் பயந்து போய் இந்த படத்துக்கு வந்து டப்பிங் பேசி கொடுத்தார். அதை மனதில் வைத்துக்கொண்டு தான் அவர் இந்த மாதிரி பொய் சொல்லி இருக்கிறார் என்று கூறியிருந்தார் இப்படி ஒரு நிலையில் கிஷோரிடம் யோகி பாபு போனில் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் தாதா படத்தை வெளியிட சென்னை உயிர் நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full