எனக்கு என்ன தரணும் என்று தலைவர் விஜய்க்கு தெரியும் - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தாடி பாலாஜி
தன்னைக் குறித்த விமர்சனங்களுக்கு தாடி பாலாஜி கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாக தவெக-பாலாஜி குறித்த சர்ச்சை தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா இணையத்தில் மிக பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் தாடி பாலாஜி. இவர் பெரும்பாலும் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தான் நடித்திருந்தார்.
அது மட்டும் இல்லாமல் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணிபுரிந்து இருந்தார். பின் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க நடிகர் தாடி பாலாஜி அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். இவர் முதலில் திமுக கட்சியில் தான் இருந்தார். கடந்த ஆண்டு விஜய், கட்சி தொடங்குகிறார் என்று தெரிந்ததுமே இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டார். ஆரம்பத்தில் இது தொடர்பாக கேட்டபோது பாலாஜி, விஜய் சொன்னதற்காக வேலை செய்கிறேன் என்று சொன்னார். அதன் பிறகு பாலாஜி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டார். சமீபத்தில் கூட விஜய் உடைய உருவத்தை டாட்டூவாக தன்னுடைய நெஞ்சில் குத்தி இருந்தார் பாலாஜி. இதை வீடியோவாகவும் பாலாஜி வெளியிட்டு இருந்தார்.
விஜய் கட்சியில் பாலாஜி:
இதை அடுத்து தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி இரண்டாவது ஆண்டை அடி எடுத்து வைப்பது தொடர்பாக விழா நடத்தப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த விழாவில் புதிய பொறுப்பாளர்களையும் விஜய் அறிவித்திருந்தார். அதில் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் போன்ற பலருக்குமே பொறுப்புகள் வழங்கப்பட்டது. தாடி பாலாஜிக்கு பொறுப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு எந்த பொறுப்புகளுமே கொடுக்கவில்லை. மேலும், இது தொடர்பாக தாடி பாலாஜி பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் அவர், ஆதவ் அர்ஜுனாவை தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் வரவேற்கும் வீடியோவையும், தான் டாட்டூவாக குத்திய போட்டோவையும் ஒப்பிட்டு, அவளோ புது பாய் பிரண்டோட ஹாப்பியா இருக்கா தற்குறி நானே அவள் நினைவோடு என்று கூறி இருந்தார்.
தாடி பாலாஜி விளக்கம்:
பாலாஜிக்கு பொறுப்பு எதுவும் கொடுக்காத விரக்தியில் தான் இப்படி எல்லாம் பேசுகிறார் என்றெல்லாம் கூறி இருந்தார்கள். இது குறித்து பல கேள்விகள், கிண்டல், கேலிகள் எழுந்து இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் கொடுத்து தாடி பாலாஜி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார், அதில் அவர்
ரெண்டு மூணு நாளாவே என்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் தான் எல்லாரும் பகிருகிறார்கள். எதர்ச்சியாக யாரோ ஒருத்தர் எனக்கு அனுப்பிச்சாங்க அதை நான் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வச்சிட்டேன். ஆனால் அது இப்படி ஒரு விவாத பொருள் ஆகும் என்று எனக்கு தெரியாது. நான் என்னைக்குமே சொல்வது, என் நண்பரும் தவெக தலைவர் விஜய் சார் கட்சி ஆரம்பிக்கும் போதே நான் என்ன சொல்லி இருந்தேன் என்றால், எனக்கு ஒரு நண்பராக அவருக்கு வேலை செஞ்சுட்டு இருக்கேன். அவர் நல்லபடியா வரணும்.
விஜய் கட்சி குறித்து சொன்னது:
அந்தக் கட்சி நல்லபடியா வளரனும். பதவியை எதிர்பார்த்தோ,பொறுப்பு கொடுப்பாங்கன்னோ நான் வேலை செய்யவில்லை. இது யாருக்கு புரியுதோ இல்லையோ நான் கும்பிடுகிற கடவுளுக்கும், மதிப்புக்குரிய தவெக தலைவர் விஜய் சாருக்கும் புரியும். ஏனென்றால் அவர் எல்லார் பேச்சையும் கேட்டு முடிவு எடுக்க மாட்டார். அவரை ஒரு ஆய்வு செய்வார். அந்த முடிவு சரியாக இருக்கும். ஆனால், இதை விவாத பொருளாக்கி சில பேர் பேசுறாங்க. இங்க குத்தலாமா அங்க குத்தலாமான்னு கேக்குறாங்க. அவங்களுக்கு எல்லாம், தம்பி நாங்கல்லாம் நெஞ்சுல குத்துவோம். மத்தவங்கள மாதிரி முதுகுல குத்துற ஆளு நாங்க கிடையாது. அதே மாதிரி ஒருத்தர் பச்சை குத்தி கொண்டால் பதவி வந்துருமான்னு முட்டாள்தனமாக பேசுறாரு. ஒருத்தவங்கள பத்தி என்னன்னு தெரியாம பேசுறீங்க பாத்திங்களா அதுவே மிகப்பெரிய தவறு. என்னை பத்தி முழுமையாக உங்களுக்கு என்ன தெரியும். நான் யாரையுமே ஒருமையில் பேசுவதே கிடையாது.
தவெக பதவி குறித்து சொன்னது:
இதை ஆரம்பத்தில் இருந்தே பண்ற ஒரு விஷயம். அதே மாதிரி என்னுடைய நண்பரும் தலைவருமான விஜய் சாரும் அப்படிதான். இதுவரை யாரையுமே ஒருமையில் பேசியதே கிடையாது. நடிகராக இருக்கும் போதும் சரி தலைவராக இருக்கும் போதும் சரி. தவெக வில் எனக்கு ஒரு பொறுப்பு கொடுப்பாங்கன்னோ இல்ல பதவி கொடுப்பாங்கன்னோ நான் வேலை செய்ய வில்லை. நான் இன்னைக்கு வரைக்கும் வேலை செய்வதற்கு காரணம், என்னுடைய தலைவர் எனக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். அந்த நன்றி கடனை நான் ஏதாவது ஒருவிதத்தில் செய்யணும் என்று நினைக்கிறேன். அதனால்தான் இப்ப வரைக்கும் ஓடிட்டு இருக்கேன். நான் யாருடைய பேச்சுக்கும் பெருசாக ரெஸ்பான்ஸ் செய்யவில்லை. காரணம் என்ன என்றால் பாலாஜிக்கு என்ன கொடுக்கணும் என்று தலைவருக்கு தெரியும். என்ன கொடுத்தால் இன்னமும் ஸ்ட்ராங்கா ஓடுவார்னு என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். கூடிய விரைவில் விஜய் சார் கிட்ட இருந்து எனக்கு அழைப்பு வரும், அப்போதிருந்து என்னுடைய ஓட்டம் வேற மாதிரி இருக்கும் என்று கூறி இருக்கிறார் .