தமிழில் தடையறத் தாக்க, மீகாமன் போன்ற தரமான படங்களை கொடுத்தவர் இயக்குனர் மகிழ் திருமேனி. தற்போது இவரது இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தடம்’ படத்தின் திரை விமர்சனத்தை தற்போது காணலாம்.

படம்:- தடம்
இயக்குனர்:- மகிழ் திருமேனி
நடிகர்கள் : – அருண் விஜய், தான்யா ஹோப், யோகி பாபு, சோனியா அகர்வால், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் மற்றும் பலர்.
தயாரிப்பு : – Redhan -The Cine People
இசையமைப்பளார் :-அருண் ராஜ்
வெளியான தேதி : 01-03-2019

Advertisement

கதைக்களம் :

எழில் மற்றும் கவிதை என்ற இரண்டு இரட்டையர்களைப் பற்றி தான் இந்த படம். எழில்என்ற அருண் விஜய் ஒரு கட்டுமான கம்பெனி நடத்தி வருகிறார். அவர் மிகவும் பொறுப்பாகவும் அமைதியான ஆளாகவும் இருந்து வருகிறார். மேலும், எந்த பிரச்சினைக்கும் செல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு தன் காதல் உண்டு என்று மிகவும் ஒரு சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு நேர் எதிர் எதிராக இருந்து வருகிறார் எழிலின் சகோதரர் கவின். சற்று முரட்டு தனமாக நாளாகவும் வாழ்க்கையில் எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல் பணம் தான் வாழ்கை என்று அவரது நண்பரான யோகிபாபு செய்தது கொள்ளையடித்துக் கொண்டு தனது வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து வருகிறார்.

Advertisement

ஒரு கட்டத்தில் தனது சொந்த பிரச்சினை காரணமாக காரணமாக வெயில் மிகவும் மனவேதனையில் இருக்கிறார் அதேவேளையில் அவரது சகோதரரான கவிஞனுக்கும் ஒரு பிரச்சினை வருகிறது. அது என்னவெனில் கவினுக்கு உடனடியாக ஒன்பது லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. இதனால் அவர் ஒரு பெரிய இடத்தில் கொள்ளையடிக்க திட்டமிடுகிறார். அந்த நிலையில் ஆகாஷ் என்ற ஒரு இளைஞர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு விடுகிறார். அவர் கொலை செய்யப்பட்ட இடத்தில் அருண் விஜய்யின் ஒரு ஆதாரம் கிடைத்து விடுகிறது.

Advertisement

அதன் பின்னர்ட் இரட்டையர்களான எழில் மற்றும் கவின் ஆகிய இருவரிடமும் போலீஸ் அதிகாரியாக வரும் வித்யா பிரதீப் விசாரணையை தொடங்குகிறார். இறுதியில் அந்த கொலையை செய்தது யார் ?எதற்காக இந்த கொலை செய்யப்பட்டது? பின்னர் கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு எந்த விதமான தண்டனை வழங்கப்பட்டது என்பது தான் மீதி கதை.

ப்ளஸ் :

அருண் விஜய் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். உருவ ஒற்றுமையில் பெரிதாக மாற்றம் காண்பிக்க வில்லை என்றால் தனது நடிப்பால் இரண்டு கதாபாத்திரத்தையும் அழகாக வித்தியாசப்படுத்தி உள்ளார் அருண் விஜய். வழக்கம் போல படத்தில் வரும் கதாநாயகிகளுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை என்றாலும் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் வித்யா பிரதீப் விசாரணை ஸ்டைல் அனைவரையும் கவர்கிறது.

அதேபோல இந்த படத்தின் முக்கிய பலம் திரைக்கதைதான் வழக்கமான கதை என்றாலும் அதனை விறுவிறுப்பான திரைக்கதையை கொண்டு சுவாரசிய படுத்தியுள்ளார் இயக்குனர். மேலும் , படத்தின் திரைக்கதைக்கு ஏற்றவாறு சமமாகஈடு கொடுத்துள்ளது படத்தின் ஒளிப்பதிவு. கிளைமாக்ஸ் காட்சியில் குற்றவாளிக்கு கொடுக்கும் தண்டனை வித்தியாசமாகவே உள்ளது என்றே கூறலாம்.

மைனஸ் :

என்னதான் திரில்லர் கதையாக இருந்தாலும் படத்தின் இரண்டாம் பாதியில் தான் விறுவிறுப்பு கூடுகிறது. முதல் பாதியில் தேவையில்லாத காட்சிகள் விறுவிறுப்பு இல்லாத காட்சிகளும் வருவது கொஞ்சம் போர். யோகி பாபு இந்த படத்தில் கொஞ்சம் ஏமாற்றம். படத்தின் பின்னணி இசை கொடுத்தாலும் படத்தின் பாடல்கள் நம் நினைவிற்கு நிற்கவில்லை. அதேபோல இரட்டையர்களை தோற்றத்தின் அடிப்படையில் சற்று வித்தியாசப்படுத்தி இருந்தாள் நன்றாக இருந்திருக்கும்.

இறுதி மதிப்பு :

இரட்டையர் கொலை, சஸ்பென்ஸ் இதுபோன்ற ஜானரில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வந்து விட்டது. இருப்பினும் தனது அழுத்தமான திரைக்கதையின் மூலம் இந்த படத்தை சற்று வித்தியாசமாக எடுத்துள்ளார் படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி. ஏற்கனவே அருண் விஜய் மகிழ்திருமேனி கூட்டணியில் வெளிவந்த தடையறத் தாக்க திரை படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த படம் அதே அளவு வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மொத்தத்தில் இந்த படம் ஒரு ஆவரேஜ் ஆன திரில்லர் மூவி கண்டிப்பாக மிஸ் செய்யாமல் பார்க்கலாம் இந்த படத்திற்கு Behindtalkies கொடுக்கும் மதிப்பு 6.5 /10.

Advertisement