தல 59 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம்..!படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் இங்கு தானா..!

By Rajkumar · 20/12/2018

அல்ட்டிமேட் ஸ்டார் அஜித் விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான போனிகபூர் தயாரிக்கிறார்.

இந்த படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்ட 'பிங்க்' என்ற படத்தின் ரீ மேக் என்று உறுதியானது. இந்த படத்தில் நஸ்ரியா, AAA பட இயக்குனர் ஆத்விக்,ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள் நடிக்கின்றனர். மேலும், படத்திற்கு
நிரவ்ஷோ ஒளிப்பதிவு செய்கிறார்.

பொதுவாகவே அஜித் படங்களின் அப்டேட்களை அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்ப்பார்கள். ஆனால் அவர்கள் வெறுத்துப் போகும் விதமாகவே சமீபகாலமாக அஜித் பட அப்டேட்கள் நீண்டநாட்களாக வராமல் இழுத்தடிக்கப்பட்டது.

இந்நிலையில் ரசிகர்களுக்கு தெம்பூட்டும் விதமாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவெனில், இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்க இருப்பதாகவும் அதற்காக அங்கு பெரிய செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது மேலும் ஒளிப்பதிவாளர் நிரவ்ஷோவிடம் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ரசிகர் ஒருவர் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full