தல 59 படத்தின் தலைப்பு இது இதுதானா.! இருந்தா செம மாஸா தான் இருக்கும்.!

By Rajkumar · 29/1/2019

‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக ஹிந்தியில் வெற்றிபெற்ற ‘பிங்க்’ தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். சதுரங்கவேட்டை எச்.வினோத் இயக்கவுள்ள இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் கபூர் சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். 

இந்த படத்தில் பணிபுரியும் கலைஞர்களின் விவரத்தை சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்திற்கு 'அதிகாரம்' என்று தலைப்பு வைத்துள்ளதாக சில போஸ்டர்கள் இணையத்தில் வைரலாக பரவி வந்தது. ஆனால், அது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட போஸ்டர் என்று பின்னர் தெரியவந்தது.

இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் தான் தமிழில் அஜித் நடிக்கிறார். ஆனால் படத்தை காட்சி வாரியாக அப்படியே ரீமேக் செய்யாமல் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்பட மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளாராம் வினோத். படத்தை எடுத்த பிறகு அதை பிங்க் படத்தின் தயாரிப்பாளர் சூஜித் சர்காருக்கு போட்டுக் காட்ட உள்ளார்களாம்.

இருப்பினும் இந்த படத்தில் நடிகர் அஜித் ஒரு வழக்கறிஞ்சராக நடிப்பது மட்டும் உறுதி. எனவே, அஜித்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல தான் 'அதிகாரம்' என்ற தலைப்பு இருப்பதாக ராசிகர்களும் எண்ணி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full