ஜீவாவின் நடிப்பில் வெளிவந்த 'தலைவர் தம்பி தலைமையில்' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

By subhashini · 15/1/2026

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஜீவா. தற்போது ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தலைவர் தம்பி தலைமையில். இந்த படத்தை ஃபேமிலி படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்க நிதிஷ் சகாதேவ் தான் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை கண்ணன் ரவி என்பவர் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிரத்தனா, ஜென்ஷன் திவாகர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கிறார். பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் ஜீவா, அரசியல் குடும்பத்தின் தலைவரின் தம்பி என்று அடையாளத்துடன் இருக்கிறார்.
அதிகாரம், அரசியல் சூழ்ச்சி, குடும்ப அரசியலுக்குள் ஜீவாவும் சிக்கி கொள்கிறார். பின் இவர் கிராம பிரசிடண்டாக இருக்கிறார். அப்போது அந்த கிராமத்தில் ஒரு பொண்ணுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் திருமணம் நடக்க இருப்பதால் முதல் ஆளாக அந்த திருமணத்தை தலைமை தாங்கி நல்லபடியாக நடத்தி வைத்தால் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

இதனால் ஜீவா அந்த திருமண வேலைகளை செய்கிறார். அந்த பெண்ணின் திருமணத்தை சுற்றி ஏற்படும் சிக்கல்களை எல்லாம் ஜீவா தீர்த்து வைத்தாரா? இல்லை அதில் சிக்கி தவித்தாரா? என்பதுதான் படத்தினுடைய மீதி கதை. படத்தில் ஹீரோ ஜீவா கலகலப்பான ஒரு துள்ளலான நடிப்பை கொடுத்திருக்கிறார். மீண்டும் அந்த சிவா மனசுல சக்தி ஜீவாவை பார்த்த ஞாபகம் இருக்கிறது. இவர் அடுத்து வரும் தம்பி ராமையா தன்னுடைய அனுபவ நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

காமெடியை விட இந்த படத்தில் அவர் உணர்வுபூர்வமாக நடித்திருக்கிறார். திருமணத்தை நல்லபடியாக நடத்தி கொடுக்க வேண்டும் என்று சிவா செய்யும் வேலைகள் எல்லாம் ரசிக்கும்படியாக இருக்கிறது. ஒரு காமெடியான அரசியல் நய்யாண்டியாக இயக்குனர் கொண்டு சென்றிருப்பது சிறப்பு. படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை வரும் காமெடிகள் எல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது.

அதோடு படத்தை போர் அடிக்காத வகையில் இயக்குனர் கொண்டு சென்றிருப்பதும் நன்றாக இருக்கிறது.
ஆங்காங்கே சில காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தினாலும் காமெடிகள் அதை ஈடு செய்கிறது. இந்த படத்தை மலையாள இயக்குனர் நிதிஷ் சகாதேவ் தான் இயக்கி இருக்கிறார். மலையாளத்தில் வருவது போல ஸ்லோவான நெரட்டிவாக இருந்தாலும் காமெடியின் மூலம் கொஞ்சம் அதை கலகலப்பாக கொண்டு சென்றிருக்கிறார். டெக்னிக்கலாக படமும் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் பொங்கலுக்கு ஜாலியாக குடும்பத்துடன் பார்க்கும் படமாக தான் இருக்கிறது.

நிறை:

ஜீவாவின் நடிப்பு

கதைக்களம் ஓகே

காமெடி அட்ராசிட்டி

டெக்னிக்கல் விஷயங்கள் நன்றாக இருக்கிறது

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

சில காட்சிகளை அழுத்தமாக சொல்லி இருக்கலாம்

மற்றபடி படத்தில் பெரிதாக குறைகள் எதுவும் இல்லை

மொத்தத்தில் தலைவர் தம்பி தலைமையில் - காமெடி சரவெடி

behindtalkies AMP · Quick view
View full