அனிரூத்தை விட பெரிதாக பண்ணிக் காட்டுவேன் என்று தமன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக தளபதி என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். சமீபத்தில் தளபதி விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார் . இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தனர் . மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்துஇருந்தார்.

படத்தில் ஒரு மால்-லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். எதர்ச்சையாக கடத்தப்படும் மால்-லில் விஜயும் சிக்கி கொள்கிறார். இறுதியில் விஜய், மால்-லையும், மக்களையும் எப்படி காப்பாற்றினார்? இதன் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான். பீஸ்ட் படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று இருந்தது. அதோடு நெல்சன் பேச்சையும், பீஸ்ட் படத்தையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து இருந்தார்கள்.

Advertisement

பீஸ்ட் படம் வசூல்:

ஆனால், பீஸ்ட் வசூலில் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். வம்சி தமிழில் ஏற்கனவே தோழா என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

தளபதி 66 படம்:

சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை நடைபெற்று இருந்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். மாஸ்டர், பீஸ்ட் போன்ற படங்களில் இருந்த அதே லுக்கில் தான் விஜய் இந்த படத்திலும் இருக்கிறார். ஏற்கனவே இந்தபடத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் இசையமைப்பாளர் தமன் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

Advertisement

தமன் அளித்த பேட்டி:

அதில் அவர் தளபதி 66 படம் குறித்து கூறியிருப்பது, முதலில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. அந்த படத்தில் நான் இசையமைக்க ஒப்பந்தம் ஆனேன். எதிர்பாராத காரணத்தால் அந்தப் படம் டிராப் ஆகிவிட்டது. பின் பீஸ்ட் படத்திற்கு பிறகு உருவாகும் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளர் நீ தான் என்று விஜய் எனக்கு வாக்குறுதி அளித்திருந்தார். அப்படியே எனக்கு தளபதி 66 படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதிஷ்டவசமாக வம்சி மற்றும் தில் ராஜு இந்த படத்தை எடுக்கிறார்கள். விஜய் ஒரு டான்ஸர் என்பதை தாண்டி அவர் ஒரு சிறந்த நடிகர். அதுமட்டுமில்லாமல் அனிருத்தின் வாத்தி கம்மிங், அரபி குத்து போன்ற பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

Advertisement

அனிருத் குறித்து தமன் சொன்னது:

ஒரு மிகச்சிறந்த விஜய் ரசிகரால் மட்டுமே தான் இப்படி ஒரு பாடலை கொடுக்க முடியும். அனிருத் மிகப்பெரிய விஜய் ரசிகர் என்பதை நிரூபித்துவிட்டார். அதே போல நானும் என் இதயத்தில் விஜய் எந்த இடத்தில் வைத்திருக்கிறேன் என்பதை தளபதி 66 படத்தில் கம்போஸ் மூலம் காண்பிப்பேன். இந்த படத்தின் பாடல் மூலம் நான் மிகச் சிறந்த விஜய் ரசிகன் என்பதை நிரூபித்து காட்டுவேன். இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட் படம். நீண்ட வருடங்களுக்கு பிறகு சென்டிமென்ட் படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படம் கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement