தவெக தலைவர் விஜய் தொடங்க இருக்கும் 24 மணி நேர புது செய்தி சேனல்- என்ன பெயர் தெரியுமா?

By subhashini · 4/11/2024

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விஜய் அவர்கள் புதிதாக சேனல் தொடங்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே விஜய்யின் தவெக குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக ஜொலித்துக் சினிமா விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தான் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் தன் கட்சியின் பெயரை விஜய் அறிவித்திருந்தார்.

அதோடு வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிடுவதாக விஜய் அறிவித்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் தன் கட்சி கொடியை ஏற்றி உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி இருந்தார். அந்த கட்சி கொடியில் வாகை மலரும் இரு பக்கமும் யானை உருவம் இருந்தது.

தமிழக வெற்றிக் கழகம் மாநாடு:

அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, வி.சாலையில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தனது முதல் அரசியல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார் தலைவர் விஜய். மேலும், மாநாட்டில் முழு அரசியல் தலைவனாக விஜய் பேசியிருந்தது பலரையுமே மெய்மறக்க வைத்தது. அதோடு இந்த மாநாட்டிற்கு இலட்சக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் திரண்டு வந்து இருந்ததை பார்த்த விஜய் எமோஷனல் ஆகி கண்கலங்கி இருந்தார்.

மாநாடு குறித்த தகவல்:

அதேபோல் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விஜய்னுடைய பேச்சும் அனல் பறக்க இருந்தது. அதற்குப்பின் மேடையில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அதற்கு பிறகு கட்சி பாடல் முடிந்தவுடன் விஜய் மேடைக்கு வந்தார்.
அங்கு அமைக்கப்பட்டிருக்கும் ரேம்பில் விஜய் அவர்கள் தொண்டர்களை பார்த்து கையசைத்தப்படி உற்சாகத்துடன் நடந்து இருந்தார். பின் மாநாட்டில் விஜய், தன் கட்சி கொள்கைளை குறித்து பேசி இருந்தார். பின் பாண்டிய மன்னன் குட்டி ஸ்டோரி குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

கட்சியின் புது சேனல்:

அதுமட்டுமில்லாமல் இந்த மாநாட்டில் இவர் பாஜக, திமுக கட்சிகள் செய்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து பேசியிருந்தது மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், விஜயின் மாநாட்டிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்திருந்தாலும் வழக்கம்போல சில அரசியல் கட்சிகள் அவரை விமர்சித்தும் அவர் கருத்துக்களுக்கு கன்னடம் தெரிவித்தும் இருந்தார்கள். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

சேனல் குறித்த தகவல்:

இதில் கட்சிக்காக ஒரு புதிய டிவி சேனல் திறக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சேனலில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், செய்திகள், விஜயினுடைய சுற்றுப்பயணம் உட்பட எல்லா விவரத்தையும் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த டிவி சேனலுக்கு 'தமிழ் ஒளி' என்று பெயர் வைப்பதாகவும் விரைவில் இந்த டிவி சேனல் தொடங்கப்படுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியானது தொடர்ந்து ரசிகர்கள் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full