தளபதி 67 படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். சமீபத்தில் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘வாரிசு’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு படம் இரண்டும் ரசிகர்களை திருப்த்தி படுத்த தவறிய நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை தான் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றன்ர்.

அதற்கு முக்கிய காரணமே அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதால் தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது மீண்டும் விஜய்யுடன் இணைந்து இருக்கிறார். இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளுக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது.

Advertisement

படத்தில் குவிந்த கோலிவுட் பிரபலங்கள் :

மேலும், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், கவுதம் மேனன் உள்ளிட்டோர் படத்தில் நடிக்கின்றனர்.இப்படி தமிழ் சினிமாவில் மாஸ் பிரபலங்கள் நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மேலோங்கி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் பாலிவுட் நடிகரும் kgf பட வில்லனுமான சஞ்சய் தத்தும் நடிக்க இருக்கிறார். அவர் கண்டிப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடிப்பார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.

தொழில்நுட்ப கலைஞர்கள் :

மேலும், இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமிக்கிறார். ஏற்கனவே கத்தி,பீஸ்ட்,மாஸ்டர் படங்களை தொடர்ந்து அனிருத் நான்காவது முறையாக விஜய்யுடன் இணையந்துள்ளார். பீஸ்ட் படத்தில் ஒளிப்பதிவு மேற்கொண்ட மனோஜ் பரமஹம்சா தளபதி 67 படத்தில் இணைந்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக எஸ்.எஸ்.லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே மாஸ்டர் படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

படத்தின் பிஸ்னஸ் :

மேலும், இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவியும், டிஜிட்டல்  – ஓ.டி.டி. வெளியீட்டு உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும் பெற்றுள்ளன. இதே போன்று ஆடியோ வெளியீட்டு உரிமையை சோனி மியூசிக் பெற்றுள்ளது. தளபதி 7 படத்தின் அப்டேட்களை தொடர்ச்சியாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த படத்தின் டைடடி இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

Advertisement

படத்தின் டைட்டில் :

கை மற்றும் உடல் முழுவதும் ரத்தம் தெறிக்க விஜய் காட்சி அளிக்கும் ஒரு போஸ்டரை வெளியிட்டு இந்த படத்தின் அப்டேட் குறித்து நேற்று ஒரு ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகி இருந்தது. இதனால் தளபதி 67 படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது அந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படத்திற்கு ‘ leo ‘ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

Advertisement