தளபதி படத்தில் ரஜினியின் மகளாக நடித்திருந்த குழந்தையின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் மணிரத்தினம் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்த படம் தளபதி.

இந்த படத்தில் மம்முட்டி, அரவிந்த்சாமி, பானுபிரியா, ஸ்ரீவித்யா, ஷோபனா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. அதோடு இன்றும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் வருகிறது. குறிப்பாக, இந்த படத்தில் ரஜினி- மம்முட்டியின் நட்பு காட்சிகள் எல்லாம் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங்க் ஆகி இருக்கிறது.

Advertisement

அது மட்டும் இல்லாமல் படத்தில் தன்னுடைய நண்பன் மம்முட்டி சொன்ன ஒரு வார்த்தைக்காக பானுப்ரியா மற்றும் அவளுடைய மகளை தன்னுடைய மனைவி மற்றும் மகளாக ரஜினிகாந்த் ஏற்றுக்கொள்வார். அந்த காட்சிகள் எல்லாம் எமோஷனலாகவே இருக்கும். இந்த நிலையில் தளபதி படத்தில் ரஜினியின் மகளாக நடித்த குழந்தையை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். ரஜினிக்கு மகளாக நடித்திருந்தவர் பேபி விசித்ரா. இவர் ரஜினியின் தளபதி படத்தின் மட்டுமில்லாமல் அஜித் நடிப்பில் வெளிவந்த ஆசை படத்திலும் நடித்திருந்தார்.

பேபி விசித்திராவின் லேட்டஸ்ட் புகைப்படம்:

தற்போதைய பேபி விசித்திராவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் இவர் தானா ரஜினியின் மகள்! என்ற ஆச்சரியத்துடன் கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு ரஜினியின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ஜெயிலர். இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

Advertisement

லால் சலாம் படம்:

இதனை அடுத்து கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த படம் லால் சலாம். இந்த படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார். இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் கொடுத்து இருக்கிறார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கிறது.

Advertisement

ரஜினி நடிக்கும் படங்கள்:

தற்போது ரஜினி அவர்கள் ஜெய்பிம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து ரஜினி அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் இன்னும் சில படங்களில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement