விமானத்தில் சுனைனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ள விஜய் - லத்தி டீசர் விழாவில் சொன்ன சுனைனா

By subhashini · 27/7/2022

விஜய் குறித்து டீசர் வெளியீட்டு விழாவில் சுனைனா கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகை சுனைனா. தமிழில் நடிகர் நகுல் நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சுனைனா. இதனை தொடர்ந்து இவர் மாசிலாமணி, வம்சம், சமர், யாதுமாகி, தெறி, காளி, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார்.

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் , கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். ஆனால், இவரால் முன்னணி நடிகையாக தான் வலம் வர முடியவில்லை. பின் இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளிவந்த “சில்லுக் கருப்பட்டி” என்ற படத்தில் நடிகை சுனைனா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அவருடைய கதாபாத்திரத்தை பார்த்து பலரும் பாராட்டி இருந்தார்கள்.

சுனைனா நடிக்கும் லத்தி படம்:

அதை தொடர்ந்து ட்ரிப் படத்தில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. தற்போது எரியும் கண்ணாடி என்ற படத்தில் சுனைனா நடித்து வருகிறார். பின் சுனைனா அவர்கள் விஷாலின் லத்தி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை வினோத் குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

டீசர் விழாவில் சுனைனா சொன்னது:

மேலும், படத்தில் சுனைனா, சூரி, ரோபோ சங்கர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் விஷால் நடித்த லத்தி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. டீசர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் விழாவில் கலந்து கொண்ட சுனைனா அவர்கள் விஜய் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில், ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு சுனைனா விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்.

விஜய் சொன்னது:

அப்போது விஜய்யும் அதே விமானத்தில் பயணம் செய்திருக்கிறார். விஜய் தனது உதவியாளரின் எண்ணிலிருந்து சுனைனாவுக்கு போன் செய்து ஆச்சரியப்படுத்தினார். பின்னர் விஜயின் அருகில் அமர்ந்த சுனைனா தனது சென்னை பயணம் குறித்தும், அவரது லத்தி படத்தின் டீசர் வெளியீட்டு விழா குறித்தும் தெரியப்படுத்தி இருக்கிறார். இதையடுத்து இப்படத்திற்காக சுனைனாவுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்த விஜய் விஷாலுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு கூறி இருக்கிறார்.

விஜய் நடிக்கும் படம்:

இதை தான் லத்தி படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் சுனைனா பகிர்ந்திருக்கிறார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சுனைனா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் அவர்கள் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். ஐதராபாத் ஷெட்யூலை முடித்துள்ள விஜய் தற்போது சென்னையில் தொடங்க இருக்கிற அடுத்த ஷெட்யூலில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full