'கெட்ட பையன் சார் அந்த சின்ன பையன்' விஜய் சொன்ன குட்டி ஸ்டோரியில் யார் அந்த பாண்டிய மன்னன்? விளக்கம் இதோ

By subhashini · 28/10/2024

மாநாட்டில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி குறித்த செய்தி தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். சமீப காலமாக தவெக கட்சியின் முதல் மாநாடு குறித்த செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் தான் 'தமிழக வெற்றிக் கழகம்' என்னும் தன் கட்சியின் பெயரை விஜய் அறிவித்திருந்தார்.
அதோடு வருகின்ற 2006 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிடுவதாக விஜய் அறிவித்திருந்தார்.

இப்படி இருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் தன் கட்சி கொடியை ஏற்றி உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, வி.சாலையில் இன்று அக்டோபர் 27ஆம் தேதி தனது முதல் அரசியல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடுத்தி இருக்கிறார் தலைவர் விஜய். இன்று மாநாட்டில் முழு அரசியல் தலைவனாக விஜய் பேசியிருந்தது பலரையுமே மெய்மறக்க வைத்தது. அதோடு இந்த மாநாட்டிற்கு இலட்சக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் திரண்டு வந்திருந்தார்கள்.

தவெக முதல் மாநாடு:

இதை பார்த்த விஜய் எமோஷனல் ஆகி கண்கலங்கி இருந்தார். அதேபோல் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விஜய்னுடைய பேச்சும் அனல் பறக்க இருந்தது. அதுமட்டுமில்லாமல் பொதுவாகவே மேடைகளில் விஜய் குட்டி ஸ்டோரி சொல்வது வழக்கம். அந்த வகையில் மாநாட்டிலும் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி இருக்கிறார். அதில் அவர், நான் அரசியலுக்கு வந்ததும் சில பேர் கேட்டார்கள். தம்பி உனக்கெல்லாம் என்ன தெரியும்? நீயெல்லாம் எப்படி தாக்குபிடிப்ப? இந்த அரசியல் என்பது பெரிய அகழி ஆச்சு, அதுல தண்ணிக்குள்ள மூழ்கி தலையை மட்டும் தூக்கும் ராட்சச முதலைகள் எல்லாம் ரக ரகமாக இருக்குமே? இவர்களெல்லாம் தாண்டி நீ எப்படி கோட்டைக்குள் போவ? உன்னால முடியுமா? என்றெல்லாம் கேள்வி மேல கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி:

அவர்களெல்லாம் நான் ஒரு குட்டி கதையை சொல்கிறேன். ஒரு நாட்டில் பெரிய போர் வந்தது. அந்தப் போரில் அந்த நாட்டினுடைய பவர்ஃபுல்லான தலைவன் இல்லை. அந்த பொறுப்பு ஒரு சிறுவனிடம் கொடுக்கப்பட்டது. அதனால் அந்த நாட்டில் இருந்த பெருந்தலைகள் எல்லாமே ரொம்ப பயந்தார்கள். அந்த சின்னப் பையன் அந்த நாட்டோட படையை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு போருக்கு போகலாம் என்று சொன்னான். உடனே அங்கிருந்த தலைவர்கள் எல்லாம், நீ சின்னப் பையன். அங்கு பவர்ஃபுல்லான எதிரிகள் இருப்பார்கள். களத்தில் அவர்களை எதிர்கொள்ளனும், அதோட அவர்கள் படையை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெறணும்.

https://www.youtube.com/watch?v=ndllcPNdKHI

பாண்டிய மன்னன் கதை:

இதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை. உன்னால் முடியுமா என்று கேட்டார்கள்? எந்த பதிலும் சொல்லாமல் போருக்கு தனியாக சென்ற பாண்டிய வம்சத்தை சேர்ந்த அந்த சின்ன பையன் என்ன செய்தான் தெரியுமா? சங்க இலக்கியத்தில் ரொம்ப தெளிவா சொல்லி இருக்காங்க. படிக்காதவங்க படிச்சு தெரிஞ்சுக்குங்க, இல்ல படிச்சவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க. ஆனா, கெட்ட பையன் சார் அந்த சின்ன பையன் என்று ரொம்ப எதார்த்தமாக பேசி இருந்தார். இப்படி இவர் பேசிய சின்னப் பையன் வேற யாருமில்லை பாண்டியன் நாட்டினை சின்ன வயதிலேயே ஆட்சி செய்த நெடுஞ்செழியன் தான்.

சின்ன பையன் குறித்த தகவல்:

அவருடைய வயதை தவறாக எடை போட்ட சேர, சோழ மற்றும் கொங்கு குறுநில மன்னர்கள் எல்லோரும் பாண்டிய நாட்டை தங்கள் வசப்படுத்த படையெடுத்து போனார்கள். அவர்களை எல்லாம் துணிச்சலோடு எதிர் கொண்டு போரிட்டு அனைவரையும் தோற்கடித்து அந்த போரில் வெற்றி பெற்றார் நெடுஞ்செழியன். அவரைத்தான் தன்னுடைய குட்டி ஸ்டோரியில் விஜய் ஒப்பிட்டு பேசுகிறார். அரசியலில் தன்னை குட்டி பையனாக நினைக்கும் பலருக்குமே இந்த குட்டி ஸ்டோரி மூலம் ஒரு பாடத்தை புகட்டி இருக்கிறார் விஜய். மேலும், விஜயின் முதல் மாநாட்டிற்கு பிரபலங்கள் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டி இருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full