வயநாட்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு, பல உயிர்கள் இழப்பு - வருத்தத்தில் நடிகர் விஜய் போட்ட பதிவு

By ·

வயநாடு நிலசரிவு தொடர்பாக நடிகர் விஜய் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் வயல் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு குறித்த செய்தி தான் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாகவே கேரளாவில் உள்ள பல பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. அந்த வகையில் இன்று அதிகாலை வயநாட்டில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.

இதில் பல பேர் சிக்கி இருக்கிறார்கள். இந்த மோசமான திடீர் நிலச்சரிவில் இதுவரை 63 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். 200 குடும்பங்கள் மண்ணில் புதைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கோர சம்பவம் அறிந்து மீட்பு பணிகள் விரைவாகவே வந்து மண்ணில் சிக்கி புதைந்திருக்கும் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மீட்கப்பட்ட பல பேரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையும் கொடுத்து வருகிறார்கள்.

நிலச்சரிவு சம்பவம்:

இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி, கேரளா முதலமைச்சர் ஆகியோர் உயிர் இழந்த குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அதோடு மக்களை மீட்கும் பணியில் மத்திய அரசு அனைத்து விதத்திலும் உறுதுணையாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்கள். இன்னொரு பக்கம், தீயணைப்பு வீரர்கள், தன்னார்வலர்களும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

பிரபலங்கள் இரங்கல்:

மேலும், பிரதமர் மோடி அவர்கள் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு 50,000 இழப்பீடு தருவதாகவும் அறிவித்திருக்கிறார். இதை அடுத்து ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவர்களுக்கு தங்களின் இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் அவர்கள் பதிவு ஒன்று போட்டிருக்கிறார்.

விஜய் பதிவு:

அதில் அவர், வயநாட்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு சம்பவத்தை கேட்டு நான் ரொம்பவே வருத்தமடைந்தேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பற்றி தான் நான் யோசித்தும், பிரார்த்தனை செய்தும் இருக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் வழங்க அரசு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். தற்போது விஜயின் இந்த பதிவுதான் இணையத்தில் வைரலாகப்பட்டு வருகிறது.

விஜய் திரைப்பயணம்:

கடைசியாக நடிகர் விஜய்யின் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியாகி இருந்த 'லியோ' படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் அவர்கள் 'கோட்' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் ஐந்தாம் தேதி இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து கடைசியாக விஜய் அவர்கள் தளபதி 69 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை