"Zorro" (famous fictional masked vigilante) சர்கார் படத்தில் விஜய்யின் கேரக்டர் இதான்! லீக் செய்த சர்கார் நடிகர்

By Ajju · 18/9/2018
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் "சர்கார்" படத்தின் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த படத்தின் முக்கிய அறிப்பு ஒன்று நாளை வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், பிரபல வில்லன் நடிகர் ராதாரவி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராதாரவியிடம் "சர்கார்" படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த நடிகர் ராதா ரவி, நடிகர் விஜய் தற்போது சூப்பர் ஸ்டார் என்ற ஒரு வட்டத்துக்குள் சென்று விட்டார். அதனால் அவருடைய ஸ்டார் என்ற பெயரை மனதில் வைத்துக்கொண்டுதான் இயக்குனர்கள் அவருக்கு கதாபாத்திரத்தை வடிவமைக்கின்றனர்.தற்போது இருக்கும் விஜய் "காதலுக்கு மரியாதையை" போன்ற படங்களில் நடிக்க முடியுமா என்று கேட்டால் நான் முடியாது என்று தான் சொல்லுவேன். நடிகர் விஜய் தற்போது சூப்பர் ஸ்டார் என்ற வட்டத்திற்குள் சென்றுவிட்டார் இனிமேல் அவர் அதிலிருந்து கீழே இறங்குவது தவறு. நடிகர் விஜய், இன்னொரு ரஜினிகாந்த என்று ஆகிவிட்டார், zoro என்ற சூப்பர் மேன் போன்ற கதாபாத்திரத்தில் தான் நடிகர் விஜய் "சர்கார்" படத்தில் நடித்துள்ளார். எப்படி zoro ஒரு சூப்பர் மேனாகவும் மக்களின் பிரதிநிதியாகவும் இருந்தாரோ அதே போல தான் "சர்கார்" படத்தில் நடிகர் விஜய் இருப்பார். அந்த அளவிற்கு தற்போது நான் சொல்ல முடியும் என்று கூறியுள்ளார் நடிகர் ராதாரவி.
behindtalkies AMP · Quick view
View full