விஜய் மகன் சஞ்சய்யின் லேட்டஸ்ட் Selfie - இணையத்தில் வைரலாகும் புகைப்படம். வெளிநாட்ல ஜாலியா இருக்கார் போல.

By Rajkumar · 8/6/2021

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் தான். படங்கள் தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. நடிகர் விஜய்க்ககு கடந்த 1999 ஆண்டு சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றுது. திருமணத்திற்கு பின்னர் விஜய்க்கு, சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்று மகளும் பிறந்தனர். இவர்கள் இருவருமே விஜய்யின் படத்திலும் சிறு வேடங்களிலும் நடித்துள்ளனர்.

விஜய் மகள் திவ்யா, விஜய் நடித்த தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்து இருந்தார். அதே போல விஜய் மகன் சஞ்சய், சஞ்சய், விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் , அடிச்சாதாங்கமாட்ட , என்ற பாடலில் ஒரு சிறு காட்சியில் நடன மாடியிருந்தார். விஜய் மகளுக்கு பேட்மிட்டன் விளையாட்டில் மிகுந்த ஆர்வம். ஆனால், விஜய் மகனுக்கு சினிமாவில் தான் ஆர்வம் அதிகம்.

அதனால் தான் ஜேசன் சஞ்சய் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படிப்பு படித்து வருகிறார். ஜேசன் சஞ்சய் ஒரு சில குறும்படங்களை இயக்கி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து. அதுபோக சஞ்சய் “ஜங்ஷன் ” என்ற குறும் படத்திலும் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்த குறும்படம் வெளியான நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சஞ்சய் நடித்த 'சிரி ' என்ற மற்றும் ஒரு குறும்படம் ஒன்று வெளியாகியது.

இந்த நிலையில் சஞ்சய்யின் புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் கார் ஓடிக்கொண்டே படு ஹாயாக பாடல் கேட்டுக்கொண்டு காரையும் ஒட்டி செல்கிறார். ஜேசன் சஞ்சய் அவரின் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் selfie புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full