அர்ஜுனின் மகளுக்கு வருங்கால மாமனார் தம்பி ராமையா இப்படி ஒரு கண்டீஷன் போட்டுள்ளாரா?

By subhashini · 2/11/2023

தன்னுடைய வருங்கால மருமகளுக்கு தம்பி ராமையா போட்டிருக்கும் கண்டிஷன் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன். மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோகம் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். அதுமட்டுமில்லாமல் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சாகச நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியையும் அர்ஜுன் தான் தொகுத்து வழங்கி இருந்தார்.

தற்போது அர்ஜுன் அவர்கள் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் லியோ படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு நேற்று தான் லியோ படத்தின் வெற்றி விழா நடந்தது. இதை அடுத்து அர்ஜுன் சில படங்களில் கமிட்டாகி இருக்கிறார். இதனிடையே நடிகர் அர்ஜுன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ‘பட்டத்து யானை’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார்.

ஐஸ்வர்யா நடித்த படங்கள்:

அதன் பின்னர் அர்ஜுன் இயக்கிய தெலுங்கு படத்திலும் ஐஸ்வர்யா நடித்தார். இருந்தாலும், இவர் தன் தந்தையை போல் சினிமாவில் இடம் பிடிக்க முடியாமல் தவிக்கிறார். மேலும், ஐஸ்வர்யா சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பிரபல காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி இருந்தது. நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் சில படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார்.

ஐஸ்வர்யா-உமாபதி காதல்:

அது மட்டும் இல்லாமல் திரைக்கு வர இருக்கும் ராஜகிளி என்ற படத்தையும் அவர் இயக்கியிருக்கிறார்.
அதோடு ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் உமாபதி பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் உமாபதிக்கும் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததால் கூடிய விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஐஸ்வர்யா-உமாபதி நிச்சயதார்த்தம்:

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நடிகர் அர்ஜுன் கட்டி இருந்த ஆஞ்சநேயர் கோயிலில் உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இருந்தார்கள். திருமண தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலரும் ஐஸ்வர்யா-உமாபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறது.

தம்பி ராமையா போட்ட கண்டிஷன்:

இந்த நிலையில் நடிகர் தம்பி ராமையா தன்னுடைய மருமகள் ஐஸ்வர்யாவிற்கு போட்டிருக்கும் கண்டிஷன் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஐஸ்வர்யா திருமணத்திற்கு பிறகு நடிக்க வரக்கூடாது. இதற்கு காரணம் ஐஸ்வர்யாவுக்கு 28 வயதும், உமாபதிக்கு 31 வயதும் தான் ஆகிறது. ஐஸ்வர்யா மீண்டும் படங்களில் நடித்தால் தேவையில்லாமல் குடும்பத்திற்குள் பிரச்சனை வரும் என்ற கண்ணோட்டத்தில் தான் தம்பி ராமையா இந்த கண்டிஷன் போட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full