தனது மகனுக்கும் அர்ஜுன் மகளுக்கும் திருமணம் எப்போது ? முதல் முறையாக தம்பி ராமய்யா சொன்ன தகவல்.

By subhashini · 31/8/2023

உமாபதி- ஐஸ்வர்யா திருமணம் குறித்து நடிகர் தம்பி ராமையா கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் 90 கால கட்டம் தொடங்கி இன்று வரை படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். பெரும்பாலும் இவர் ஆக்ஷன் படங்களில் தான் நடித்து வருகிறார். இவர் படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோகம் என பன்முகம் கொண்டு திகழ்கிறார்.

அதுமட்டுமில்லாமல் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சாகச நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியையும் அர்ஜுன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். தற்போது அர்ஜுன் அவர்கள் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. இதனிடையே நடிகர் அர்ஜுன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ‘பட்டது யானை’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார்.

அர்ஜுன் மகள்:

அதன் பின்னர் அர்ஜுன் இயக்கிய தெலுங்கு படத்திலும் நடித்தார். இருந்தாலும், இவர் தன் தந்தையை போல் சினிமாவில் இடம் பிடிக்க முடியாமல் தவிக்கிறார். இருந்தாலும், ஐஸ்வர்யா சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பிரபல காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி இருக்கிறது. நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் சில படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார்.

உமாபதி- ஐஸ்வர்யா திருமணம்:

அது மட்டும் இல்லாமல் திரைக்கு வர இருக்கும் ராஜகிளி என்ற படத்தையும் அவர் இயக்கியிருக்கிறார். அதோடு ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் உமாபதி பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் உமாபதிக்கும் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. பல மாதங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததால் கூடிய விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தம்பி ராமையா பேட்டி:

இந்த நிலையில் இது குறித்து நடிகர் தம்பிராமையா பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், அர்ஜுன் சார் ஒரு திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் அந்த திரைப்படத்தை நடித்து முடித்ததுமே திருமணம் நடக்கும். என்ன இருந்தாலும் நான் ஒரு குணசித்திர நடிகர். ஆனால், அர்ஜுன் சார் மிகப்பெரிய ஹீரோ. இதை நான் தாழ்வு மனப்பான்மையில் சொல்லவில்லை. அவருடைய சௌகரியத்தையும் பார்க்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் பெண் வீட்டாரின் சம்மதமும் அவர்களுடைய சௌகரியமும் நமக்கு ரொம்பவே முக்கியம்.

திருமணம் குறித்து சொன்னது:

கல்யாணம் என்றால் இரு வீட்டு உடைய முடிவுகள் சமமாகவும் பிரச்சனை இல்லாமலும் இருக்க வேண்டும். ஐஸ்வர்யா எங்களுக்கு இன்னொரு மகள் போல் தான் இருக்கிறார். என்னுடைய மகன் உமாபதி ஐஸ்வர்யாவை காதலிப்பதை பற்றி என்னிடம் நேரடியாகவே சொல்லிவிட்டான். பொதுவாகவே குழந்தைகள் என்பது நம்மால் உருவாக்கப்பட்டவர்கள் தான். ஆனால், நமக்காக உருவாக்கப்பட்டவர்கள் கிடையாது. அவருடைய சந்தோசம் தான் நமக்கு முக்கியம். அதனால் நாங்களும் அவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டோம். அர்ஜுன் சார் வீட்டிலும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். இனி அர்ஜுன் சார் திரைப்படம் முடிந்தவுடன் திருமணம் நடைபெறும் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full