திருமண நாளில் கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட தாமிரபரணி பட நடிகை.

By Rajkumar · 31/8/2020

மலையாள திரையுலகில் 2005-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் 'ஒட்ட நாணயம்'. இந்த படத்தினை இயக்குநர் சுரேஷ் கண்ணன் இயக்கியிருந்தார். இதில் டினு டென்னிஸ், ப்ரியாமணி, ஹரிஸ்ரீ அசோகன், முக்தா, சலீம் குமார் ஆகியோர் கதையின் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இது தான் நடிகை முக்தா அறிமுகமான முதல் மலையாள திரைப்படமாம். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் 'அச்சன் உறங்காத வீடு' என்ற படத்தில் நடித்தார் நடிகை முக்தா.

https://www.instagram.com/p/CEgCIQ_g2Yk/?igshid=miyo18p4zn6

அதன் பிறகு மலையாள திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை முக்தா, அடுத்ததாக தமிழ் திரையுலகில் நுழையலாம் என முடிவெடுத்தார். தமிழில் 2007-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் 'தாமிரபரணி'. இது தான் நடிகை முக்தா தமிழில் அறிமுகமான முதல் திரைப்படம். . தமிழ் திரையுலகிற்காக முக்தா தனது பெயரை பானு என மாற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

'தாமிரபரணி' படத்துக்கு பிறகு தமிழில் 'ரசிகர் மன்றம், அழகர் மலை, சட்டப்படி குற்றம், மூன்று பேர் மூன்று காதல், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, வாய்மை, பாம்பு சட்டை' என அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார் முக்தா.2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி நடிகை முக்தா, ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கியாரா என்ற மகள் உள்ளார்.

திருமணத்திற்கு பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான 'சந்திரகுமாரி' என்ற சீரியலிலும் நடித்து இருந்தார். இது மட்டுமில்லாமல் இவர் கொச்சியில் ப்யூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நடிகை மட்டுமல்லாமல் ஒரு கிளாசிக் டான்சர் ஆவார். சமீபத்தில் நடிகை பானு தனது திருமண நாளை கொண்டாடினர். அப்போது தனது கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் பானு.

Tamil Behind Talkies AMP · Quick view
View full