கனா காணும் சீரியலில் இருந்து விலகி தமிழும் சரஸ்வதி சீரியலில் இணைந்த நடிகை - இனி இவருக்கு பதில் இவர்

By Rajkumar · 5/5/2023

தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் இருந்து பிரபல நடிகை விலகி இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் ரசிக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் தொடர் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த தொடர் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒளிபரப்பானது. இந்த தொடரை குமரன் இயக்குகிறார்.

இந்த தொடரில் தமிழ் கதாபாத்திரத்தில் தீபக், சரஸ்வதி கதாபாத்திரத்தில் நச்சத்திரா நடிக்கிறார்கள். இவர்களுடன் ரேகா கிரிஷ்ணப்பா, தர்ஷனா, மீரா, ரமணிசந்திரன், நவீன் வெற்றி, பிரபாகரன் சந்திரன், அனிதா வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது சீரியலில் அர்ஜுன் தான் திட்டமிட்டபடியே சரஸ்வதி மற்றும் தமிழை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்.

தமிழும் சரஸ்வதியும் சீரியல்:

இதனால் மொத்த குடும்பமும் சரஸ்வதி தமிழ் மீது கோபத்தில் இருக்கிறது. தமிழ் எப்படியாவது வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று தன்னுடைய புதிய தொழில் தொடங்குவதற்காக முயற்சி செய்கிறார். இதற்கு சரஸ்வதி உறுதுணையாக இருக்கிறார். ஆனால், அர்ஜுன் அவர்களை தொழில் தொடங்க விடக்கூடாது என்பதற்காக பல பிரச்சனைகளை தருகிறார். இருந்தும் தமிழ், அர்ஜுன் கொடுக்கும் தொல்லைகளைக் கடந்து சாதிக்க போராடுகிறார்.

சீரியல் கதை:

இன்னொரு பக்கம் வசுவிற்கு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையை பார்க்க வேண்டும் என்று தமிழ் ஆசைப்படுகிறார். தமிழின் ஆசை நிறைவேறுமா? தமிழ் சாதிப்பாரா? அர்ஜுனின் உண்மை முகம் தெரிய வருமா? என்று பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் சீரியலில் இருந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை விலகிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சீரியலில் விலகிய நடிகை:

அதாவது, இந்த சீரியலில் வசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை தர்ஷனா. இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் தற்போது இவர் திடீரென்று இந்த தொடரை விட்டு விலகி விட்டார். இது குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இவர் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணமும் தெரியவில்லை. தற்போது வசு கதாபாத்திரத்தில் நடிகை சங்கீதா நடிக்கிறார்.

சங்கீதா குறித்த தகவல்:

இவரைப் பற்றி சொல்லவே வேண்டாம். இவரும் சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான். இவர் சன் மியூசிக்கில் பிரபலமான தொகுப்பாளராக இருந்தவர். அதற்குப்பின் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெற்ற அழகு தொடரில் பூர்ணா என்ற கதாபாத்திரத்தில் அழகான வில்லியாக மிரட்டி இருந்தார். பின் இவர் அன்பே வா சீரியலில் வில்லியின் தங்கை அன்பே மிரட்டி இருந்தார். தற்போது கனா காணும் காலங்கள் சீசன் 2 சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் நடித்தார். பின் இவர் கனா காணும் காலங்கள் 2வில் இருந்து விலகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full