பீர் பாட்டில்..!கண்ணில் காயம்..!சிகிச்சை பெற்றுவரும் தன்ஷிகா..!

By Rajkumar · 22/12/2018

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமாகி தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை தன்ஷிகா. தற்போது
 கவுதம் கிருஷ்ணா என்பவர் இயக்கி வரும் 'யோகி டா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தன்ஷிகாவுடன் இந்த படத்தில் கபீர் சிங், சாயாஜி ஷிண்டே, மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் சாய் தன்ஷிகாவுக்கு சில ஆக்‌ஷன் காட்சிகளும் உள்ளன.

இந்த படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. நைட் கிளப் ஒன்றில் ரவுடிகளுடன் சாய் தன்ஷிகா சண்டையிடும் காட்சியை படக்குழுவினர் படமாக்கிக் கொண்டிருந்த போது நடிகை சாய் தன்ஷிகா டூப் போடாமல் ஒரிஜினலாக நடித்துள்ளார். 

செட்டில் சாய் தன்ஷிகா நடிக்கும் காட்சி ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது. பின்னர் படப்பிடிப்பு நடந்த போது டைமிங் மிஸ் ஆனதால் சாய் தன்ஷிகாவின் இடது கண்ணுக்கு கீழே பீர் பாட்டில் குத்தியது. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு படக்குழுவினர் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full