கிரைம் திரில்லர் பாணியில் வெளியான பிக் பாஸ் தர்சனின் 'சரண்டர்' படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

By subhashini · 1/8/2025

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பிக் பாஸ் தர்ஷன். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சரண்டர். இந்த படத்தை கௌதம் கணபதி என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் லால், சுஜித் குமார், பாடினி குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை அப்பிட் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு விகாஸ் இசையமைத்து இருக்கிறார். இன்று வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் மாநில தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு காண்பிக்கிறார்கள். அதில் ஹீரோ தர்ஷன் பயிற்சி எஸ். ஐயாக வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது இவர் பணியாற்றும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஒரு துப்பாக்கி காணாமல் போகிறது. அந்த சமயத்தில் ஒரு தொகுதியில் பணம் பட்டுவாடா நடக்கிறது. அப்போது 10 கோடி ரூபாய் பணம் திருடு போகிறது. துப்பாக்கியை தேடி தர்ஷன் டீம் செல்கிறது. இன்னொரு பக்கம் பணத்தைத் தேடி தாதா சுஜித் சங்கர் டீம் சென்று கொண்டிருக்கிறது.

இரண்டையும் திருடியது யார்? எதற்காக திருடினார்கள்? இந்த இரண்டு கும்பலுக்கும் என்ன தொடர்பு? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. படத்தில் ஒவ்வொரு நடிகர்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஹீரோவாக வரும் தர்ஷன் போலீஸ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். படம் முழுவதுமே மிடுக்கான தோற்றத்தில் தனது கொடுத்த வேலையை நன்றாக செய்து முடித்திருக்கிறார்.

குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் எல்லாம் அவருடைய பங்கு சிறப்பாக இருக்கிறது. வில்லனாக வரும் சுஜித் தன்னுடைய மிரட்டல் ஆன நடிப்பை கொடுத்திருக்கிறார். லால் தன்னுடைய அனுபவ நடிப்பால் பலரையுமே கவர்ந்திருக்கிறார். இவர்களை அடுத்து படத்தில் வரும் மற்ற நடிகர்களுமே நன்றாக செய்திருக்கிறார்கள். கிரைம் தில்லர் பாணியில் இயக்குனர் படத்தை கொடுத்து இருக்கிறார். தேர்தல் சமயத்தில் பணம் பட்டுவாடா, துப்பாக்கி காணாமல் போவது தான் கதை.

இதை படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக இயக்குனர் கொண்டு சென்றிருக்கிறார். கதாபாத்திரங்கள் உடைய தேர்வு நன்றாக இருக்கிறது. இடையில் காமெடியும் சுவாரசியம். பின்னணி இசை படத்திற்கு பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது. ஒளிப்பதிவு எடிட்டீங் நன்றாக இருக்கிறது. பெயருக்கு என்று இந்த படத்தில் ஹீரோயினி வைத்திருக்கிறார்கள். மற்றபடி அவருடைய கதாபாத்திரத்திற்கு வேலையே இல்லை.

விறுவிறுப்பான காட்சியில் வரும் காமெடி ஒரு சில இடங்களில் ரசிக்க வைத்தாலும் சீரியஸான இடங்களில் சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சில தேவையில்லாத காட்சிகளை இயக்குனர் வெட்டி இருந்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். துப்பாக்கி கண்டுபிடிக்கும் காட்சிகள் எல்லாம் நன்றாக இருந்தாலும் அதை இயக்குனர் சொல்லி இருக்கும் விதத்தில் இன்னும் கொஞ்சம் தெளிவு இருந்திருக்கலாம். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக சரண்டர் இருக்கிறது.

நிறை:

நடிகர்கள் நடிப்பு

கதைக்களம் ஓகே

பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை கிரைம் திரில்லர் பாணியில் இயக்குனர் கொடுத்திருக்கிறார்

குறை:

சில காட்சிகளை தெளிவாகவும் அழுத்தமாகவும் சொல்லி இருக்கலாம்

சில கதாபாத்திரங்கள் படத்திற்கு தேவையே இல்லை

சீரியஸான காட்சிகளில் காமெடிகள்

மொத்தத்தில் சரண்டர் - முயற்சி

Tamil Behind Talkies AMP · Quick view
View full