150கும் மேல் படங்களில் நடித்த நடிகை இன்று காலமானார் - திரையுலகம் அஞ்சலி

By Ashok · 24/1/2018
பழம்பெரும் நடிகை சவுக்கார் ஜானகியின் தங்கை, நடிகை கிருஷ்ண குமாரி காலம் ஆனார். அவருக்கு வயது 85 ஆகும்.மேற்குவங்க மாநிலத்தில் பிறந்த கிருஷ்ண குமாரி 60 மற்றும் 70களில் மிகக் பிரபலமான நடிகை ஆவார். 1951ஆம் ஆண்டு நவிதே நவரத்னலு என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், சிவாஜி, என அனைவருடனும் 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கற்கோட்டை, திரும்பிப்பார், புதுயுகம், மனிதன் ஆகிய பல படங்கள் இவர் நடித்து ஹிட் ஆகியுள்ளது. பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் திரையுலகினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  
Tamil Behind Talkies AMP · Quick view
View full