என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் மூலம் திமுகவிற்கு அச்சச்சதை ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளிப்பாடு தான் இவ்வாறு இரவோடு இரவாக செய்தது என்று அண்ணாமலை சமுக வலைதளங்களில் கருத்து தெரிவித்தார். ஜூலை 27 அன்று தொடங்கபட்ட பாதயாத்திரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற உள்ளது. இரண்டு நாளாக நடைபயணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  

பாதயாத்திரை:

தற்போது தமிழக பிஜேபியின் மாநில தலைவர் தமிழகத்தில் “என் மண் என் மக்கள்” என்ற தலைப்பில் பாதயாத்திரையை நடத்தி .வருகிறது. இந்த பாதயாத்திரையானது ஜூலை 27 அன்று ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இது இந்த மண்ணோடும் மக்களோடும் இதயத்தோடு இதயமாக நின்று உறவாடும் ஒரு நடை பயணம். என் மண், என் மக்கள் என்று அமித்ஷா  குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

6 மாதங்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையில் அண்ணாமலை 225ஊர்களில் மக்களை சந்திக்க உள்ளார்.மேலும் இதில் தொடக்க நாளில் கலந்து கொண்டு பாதயாத்திரை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி வைத்துள்ளனர் என்றும், திமுக காங்கிரஸ் ஒட்டு கேட்டு வந்தால் அவர்களுக்கு 2ஜி ஊழல் நிலக்கரி பற்றி தான் அவர்களுக்கு நியாபகம் வர வேண்டும் என்று கூறி அவர் பாதயாத்திரை தொடங்கி வைத்தார்.

பாரத அன்னை சிலை அகர்ப்பு:

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவகத்தில் நிறுவப்பட்டுள பாரத அன்னை சிலையை இரவோடு இரவாக காவல் துறை அச்சிலையை அப்புறப்படுத்தியது வன்மையாக கண்டிக்க தக்கது என்றும் அவர் என்று அவர் கூறினார். மேலும் கூறிய அவர்  தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சியில் ஒரு கட்சிக்கு சொந்தமான இடத்தில் பாரத அன்னை வைப்பதற்கு கூட இல்லாத சூழல் நிலவி வருகிறது.

Advertisement

பதயதிரையின் மூலம் திமுக அரசின் ஊழல்களை வெளிச்சம் போட்டு கட்டுவதால் இந்த மாநிலத்தை சேர்ந்த இரு அமைச்சர்கள் அச்சத்தின் உச்சியில் இருப்பதன் வெளிப்பாடே இது அதன் நடவடிக்கைகள் தான் இவை அனைத்தும் என்றும் அவர் கூறியிருந்தார்    

Advertisement
Advertisement