நாங்குநேரியில் அந்த மாறி சம்பவங்கள் நடைபெற்றதுக்கு திமுக தான் காரணம் அண்ணாமலை குற்றச்சாட்டு. தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் அனைவரின்  மனதையும்  உலுக்கியது. அச்சம்பவம் என்னவென்றால் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 12ஆம் வகுப்பு மாணவனும் அவருடைய தங்கை தங்கையின் அறிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அனைவரையும்  அதிர்ச்சுக்குள் ஆக்கியது.  நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் முனியாண்டி அம்பிகாபதி தம்பதியின்னாரின் மகன் 12 ஆம் வகுப்பு மகள் ஒன்பதாம் வகுப்பு அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுடன் தகராறு ஏற்பட்ட நிலையில் மாணவர் ஒருவாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

ஒரு வாரம் கழித்து பள்ளி நிர்வாகம் அவருடைய பெற்றோரை தொடர்பு கொண்டு அவரைப் பள்ளிக்கு அழைக்குமாறு தொடர்பு கொண்டு உள்ளனர்.  இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் விசாரித்த நிலையில்,  இதே பள்ளியை சேர்ந்த சக மாணவர்கள் தன்னை தாக்கியதாக  தலைமை ஆசிரியர்யிடம் கூறியுள்ளார்.  இதனை அறிந்த சகமானவர்கள். என் தங்களைக் குறித்து ஆசிரியர்களும் சொன்னாய் என்று அந்த மாணவரிடம் பள்ளி முடிந்த பின் சென்று மிரட்டி உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி 10 மணி அளவில் வீட்டிலிருந்த மாணவரை வீட்டிற்குள் வந்த  மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி உள்ளது. இதனை தடுக்க சென்ற அவர் அவருடைய தங்கைக்கும் கையில் அரிவாள் வெட்டுவீழ்ந்தது.

Advertisement

விசாரணை நடத்திய போலிஸ்:

இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர் இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு நாங்குநேரி  அரசு மருத்துவமனையில் சேர்த்தது இச்சம்பவத்தின் அதிர்ச்சியால்  தாத்தா கிருஷ்ணன் மாரடைப்பு உயிரிழந்தார். விசாரணை நடத்திய போலீசார் இது சாதாரணமான  மாணவர்களின் பிரச்சினையாக இருக்கும் என்று ஆரம்பத்தில் கருத்தினர். அதன் பிறகு தீவிரமாக விசாரணை நடத்திய போலீசார் பாதிக்கப்பட்ட மாணவருக்கும் மற்ற  மாணவர்களுக்கும் ஜாதியை ரீதியிலான சண்டை உள்ளது  என்பது தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் திமுக ஒன்றிய செயலாளர் உறவினர் மற்றும் சக மாணவர்களின் உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதியபட்டுள்ளது. டி.எஸ்பி ராஜசேகர நடத்திய நிலையில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர் மற்றும் இரண்டு சிறார்கள் உட்பட ஆறு பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் கொலை முயற்சி உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின் ஏழாவதாக ஒரு சிறுவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

பாதயாத்திரையில் அண்ணாமலை:

என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் தற்போது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுப்பத்தில் நாங்குநேரி சம்பவம் பற்றி அவர் கூறியிருந்தார். அதில் அங்கு நடைபெற்ற ஜாதிய பிரட்சைனைகளுக்கு திமுகவின் ஒன்றிய செயலாளர் தான் காரணம் என்று அதிர்ச்சி தகவலை கூறினார்.

Advertisement

மேலும் கூறுகையில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியை தனது குடும்பத்தினற்காகவும் அவரது மருமகனுக்கும் ஆட்சி செய்கிறார் என்று கூறினார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 400 எம்.பிகளுடன் பிரதமர் மோடியை வெற்றி பெற்று வருவார் அதை யாராலும் தடுக்க முடியாது. தமிழகம் மற்றும் புதுவையில் சேர்த்து 40 உருவாக்கி வெற்றி பெற வைக்க வேண்டும் என்று அவர் பாதயாத்திரையில் கூறியிருந்தார்.        

Advertisement